பக்கம்:நாடு நலம் பெற.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-நிலநடுக்கம் உண்டான காலத்திலே சுருக்கமாக எழுதப் பெற்றது. பின் நாட்டிலும் தொலைக்காட்சியிலும் தலை விரி கோலத்தையும் பிற தேவையற்ற மாறாட்டங்களை யும் கண்டும் - நாளிதழ்களின் செய்திகளைக் கொண்டும் பிற மேற்கோள்கள் காட்டியும் எழுதப் பெற்றதாகும். இருபதாம் நூற்றாண்டின் எல்லை கடந்து இருபத் தொன்றாம் நூற்றாண்டில் காலை வைக்க நினைக்கும் உலகம் - சிறப்பாக நம் நாடு எதை எதையோ கனவு காண்கிறது. இந்த நூற்றாண்டினைத் திரும்பிப் பார்க் கும் பொழுது, நெஞ்சம் திடுக்கிடும் - அஞ்சும் செயல்கள் தென்படுகின்றன. இரண்டு பெரிய உலகப் பெரும் போர்களே அன்றி, நாட்டுக்கு நாடு - ஊருக்கு ஊர், எல்லைப் போராட்டங்கள், சிறுசிறு போர்கள்,கொள்ளை கள், சாதிவெறிச் சண்டைகள், கொலைகள், மாறாட்டங் கள், பிற தீமைகள் நாள்தொறும் பல்கிப் பெருகுவதையே காண்கிறோம். இவை அனைத்தும் மனிதன் மனிதனாக' வாழவில்லை என்பதையே காட்டுகிறது. நாட்டுப்பற்று, மெர்ழிப்பற்று, இனப்பற்று இருக்க வேண்டுவதே. ஆனால் அல்ை வெறியாக மாறக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மக்கள் சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைய வேண்டும். எட்டு வேற்றுமை களும் இணைந்துதான் தமிழ் மொழியின் வளம் காக்க வழி செய்கின்றன. மொழி காணும் நலத்தை மனிதன் காண முடியாதா? பல பெரியோர்கள் கூறியபடி யான் எனது' என்ற 'அகங்கார மமகார உணர்வே மனிதனை விலங்கினும் கீழாகச் செல்லச் செய்கின்றன. எனவே இந்த இரு கொடும் எண்ணங்களும் மனித உள்ளத்திலிருந்து நீங்கி னால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்வு பிறக்கும். எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும்' என்ற தெய்வ நிலை கர்ணும். அத்தகைய உணர்வு - தெய்வ நிலை நாட்டில் - உலகில் அரும்பத்தான் எல்லாச் சமயத் தலைவர்களும் சமுதாயத்தலைவர்களும் கூறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் அதே சமயத்தின் பேராலும் சமுதாயப் பிரிவுகளின் பேராலுமே எத்தனை எத்த னையோ போர்கள் - கொலைகள் - கொள்ளைகள் பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/9&oldid=782654" இலிருந்து மீள்விக்கப்பட்டது