பக்கம்:நாடு நலம் பெற.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தஞ்சையில் இன்றிச் சென்னையில் எங்கள் வள்ளியம்மாள் கல்லூரியிலேயே நிகழ்த்த இசைவு தந்து, அத்துறைத் தலைவரும் பல்கல்ைக்கழகத் துணைவேந்தரும் உடனி ருந்து நடத்த வழி வகுத்தனர். இது எங்கள் வள்ளி யம்மாள் கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவாகும். இரண்டாவதாகிய நாடு நலம் பெற என்ற கட்டுரை உயிர் ஒம்பும் கல்வியை - ஒருமைக் கண் கற்றவை எழுகின்ற பிறவிகள் தோறும் இணைந்து வரும் கல்வியை - எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும்-- செயல்படச் செய்யும் கல்வியை விளக்க அமைந்ததாகும். தமிழக அரசு தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் வழி அமைந்த தமிழ் வளர்ச்சி மன்றத்தில் என்னையும் ஒர் உறுப்பின. னாக இடம் பெறச் செய்துள்ளது. அம்மன்றக் கூட்டங் களில் உறுப்பினர் பலர் தமிழ் எந்தெந்த வகையில் வளர வில்லை - வளர வேண்டும் - அதற்கு ஏற்ற வழிவகை என்ன என்பன போன்ற பலவற்றை ஆராய்ந்தனர். அம்மன்றத்தில் நான் வெளியிட்ட சில கருத்துக்களைபிறர் கூறிய சில கருத்துக்களுடன் சேர்த்து இத்தலைப்பில் இக்கட்டுரை எழுதப் பெற்றது. சில் ஆண்டுகளுக்கு முன் இக்கல்வி பற்றி நான் வேறொரு சமயத்தில் எழுதிய இருபத்தேழு பாடல்களையும் உடன் முதல் இணைப்பாக இணைத்துள்ளேன். பின், தழிழகத்தில் காண முடியாத தமிழ் உணர்வு, பண்பு, வாழ்க்கை முறை, பண்பாட்டு நெறிகளைப் போற்றிக் காக்கும் மோரிசு (மெளரிஷியசு) மக்கள் வாழ்க்கையை உலகத் தமிழ் மாநாட்டுக்கு அரசு சார்பாக நான் சென்ற காலத்தில் கண்டு உளம் நெகிழ்ந்து, தமிழ் எங்கும் என்றும் எப்படியும் வாழும் என்ற மன நிறைவு பெற்று எழுதிய கட்டுரை இரண்டா வது இணைப்பாக உள்ளது. இந்நூலின் மூன்றாவது கட்டுரை மக்கள் பண்பாடும் மக்கள் வாழ்க்கை நலன்களும் சிறக்கவும் இன்றேல் நிகழும் நிகழ்ச்சியும் பிறவும் குறித்து எழுதப் பெற்றது. இதன் முதற்பகுதி 1993ல் மராட்டிய் மாநிலத்தில் பூகம்ப்ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/8&oldid=782633" இலிருந்து மீள்விக்கப்பட்டது