பக்கம்:நாடு நலம் பெற.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! - (தாயுமானவர்) முன்னுரை 'அரிதரிது மானுட ராதல் அரிது’ என ஒளவையார் அருளச் செய்துள்ளார். "எழுவகைப் பிறவியும் மானுடப் பிறவிதான் எய்துவது அரிது’ என்றார் பிறரும். இத்த கைய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் வாழ்வாங்கு வாழ வேண்டும்' என அன்று தொட்டு இன்று வரை உலகச் சான்றோர் - நல்லோர் - நாடு வாழ நலங்கண் டோர் கூறி வருகின்றனர். மனிதன் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உணர்ந்து, ஆறறிவு பெற்ற அருந்திற னால் வையத்தை வாடாமல் வைக்கக் கடமைப் பட்டவன். தாம் இன்புறுவது உலகின்புறக் காணும்' தகைமை அவனுடையது ஆம்! அவன் நேர்மையுடையவ னாக, நீதி - அறம் வழுவாதவனாக - தன்னைப் போல் பிறரை நேசிப்பவனாக - எவ்வுயிரும் தம் உயிராய் எண்ணுபவனாக வாழ்ந்து, வையத்தை வற்றா வளம் சுரந்த ஒன்றாக - நலிவெலாம் நீங்கிய நாடாகக் காணக் கடமைப்பட்டவன். அத்தகைய நன்னெறிக்கெல்லாம் அடிப்படையாகிய உடல், உயிர், உற்ற பண்பாடு இம் மூன்றையும் அவன் போற்றிப் புரக்க வேண்டியவனாகின் றான். அந்த அடிப்படையினை விளக்கவே இந்த நூலில் உள்ள மூன்று கட்டுரைகளும் எழுதப் பெற்றன. வெவ் வேறு சமயங்களில் - வெவ்வேறு அடிப்படையில் எழுதப் பெற்ற இவை இன்று இந்த நூல் வழியாக, நாடு நலம் பெற என்ற தலைப்பில் வெளி வருகின்றது. முதற் கட்டுரை உடல் ஒம்பும் தன்மையில் "மூலிகை வளமே நாட்டு வளம்' என்ற தலைப்பில் எழுதப் பெற்றது. இது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தே மருத்துவத்துறை வழியே, "மூலிகைமணி கண்ணப்பர் அறக்கட்டளை அமைப்பில் ஆற்றிய முதற் சொற்பொழி வாகும். இச்சொற்பொழிவினை நான் கேட்டபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/7&oldid=782610" இலிருந்து மீள்விக்கப்பட்டது