பக்கம்:நாடு நலம் பெற.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 135 தெனவும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவே பெரும்தலைப்புக்களில், அத்துறையினர் கூறிய தைச் சான்றாகக் காட்டி எழுதியதை அனைவரும் அறிவர். ஆனால் நடந்தது என்ன? 1.R.A. நாராயணன் என்பார் 5-11-95இந்து இதழில் Prevénting naturaldisosters gTey sp 5gmavLi Nä gömúð இயற்கைச் சீற்றத்தினின்றும் காத்துக்கொள்ளும் வழி காட்டுகின்றார். அவை உண்டாவதை அறிய வாய்ப்புகள் உண்டு என்கின்றார். We can thus infer that some natural disasters can be prevented while the efforts of others can be mitigated by regular monotiring and timely action. Arial photographs, radar images, satellite images of Earth and information from weather or meterological satellites like advanced very high Resolution Radiometric ( AUHRR) help in monitoring the physical changes on the Earth. - (Hindu 5-11-95) இதனால், அத்துறையினரை நான் குறை கூறவில்லை. கணிப்பில் தவறு ஏற்படுகின்றது; அவ்வளவே! "எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் கட்டாயம் மழை பெய் தது என்று காலவழு அமைதிக்கு மேற்கோள் காட்டும் அளவிற்கு மழை பெய்வது மூவறிவுடைய எறும்புக்கு முன் கூட்டியே தெரிய, அவை தம் முட்டையை எடுத்துக் கொண்டு மேடான இடத்திற்குச் செல்லும் என அறிகிறோம் அப்படியே சில பறவைகளும், விலங்குகளும் அறியும் ஆற்றல் பெற்றுள்ளன, எங்கோ இரஷ்யாவில் உள்ள பறவைகள், பருவத் தோற்றத்தை முன் கூட்டியே அறிந்து வேடந்தாங்கலுக்கு வந்து தங்கவில்லையா? ஆக, மூவறிவு, ஐயறிவு உடையவை அறியும் போது மனிதனால் அறிய முடியாதா? முடியும். சில தவறுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/137&oldid=782419" இலிருந்து மீள்விக்கப்பட்டது