பக்கம்:நாடு நலம் பெற.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 நாடு நலம் பெற எப்படிச் சொல்ல முடியும்? பாரதி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடிய பாட்டு இன்று செயலளவில், வாழ்ந்து கொண்டிருக்கிறது. கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின், கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார் அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் . ஆழ்ந்திருக்கும் கவிஉளம் காண்கிலார் வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் துணியும் ஆயிரம் சாத்திரம் கற்கினும் சொல்லுவார் எள்துணைப் பயன் கண்டிலார்' என்று தொண்ணுறு ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடிய பாடல்கள் இன்றும் உண்மையாகவன்றோ உள்ள்ன. சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டாகும் நிலையிலும் கல்வியில் மாறுபாடு இல்லையே. கற்பதில் தெளிவில் லையே! 'கற்கக் கசடறக் கற்பவை' என்ற வள்ளுவர் வாக்கின்ை அச்சில் ஏற்றியும் உந்துவண்டியில் எழுதியும் விட்டு, வாழ்க்கையில் பறக்க விடுகிறோமே. எனவே, அவ்வத்துறையில் கற்பவர் தெளியக் கற்க வேண்டும். வானாராய்ச்சி பெற்றுள்ள இந்த நாளில் ஆழ்ந்து கற்று, அறிவன அறிந்து, புரிவனவற்றைப் புரிந்துகொண்டு, நின்று, நெடிது நினைந்து செயல்படின் வரும் கொடிய துன்பத்தையும் முன்னமே அறியலாம் - பிறவற்றையும் நன்கு உணரலாம். ஆனால் உணரவில்லையே! நாட்டுக் கல்வி நாளுக்கு நாள் கீழே தரம் கெட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில் சொல்ல வேண்டுவதில்லை. நான் என் கல்வி எனும் கண்” என்ற நூலில் தெளிவாக இது பற்றி விளக்கியுள்ளேன். அனைவரும் நான் எழுத்தில் சொல்வதை ஏற்றுக் கொள் கின்றார்களே தவிர செயல்படுவதில்லை. உயர்கல்வி இன்னதென அறியாத- கல்லூரிப் படியினைக் காலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/138&oldid=782423" இலிருந்து மீள்விக்கப்பட்டது