பக்கம்:நாடு நலம் பெற.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - நாடு நல்ம் பெற ístmistinimimi மாநில லத்தூரில் மீண்டும் பூகம்பம் ஏற்பட, முன் 1993ல் உண்டான பூகம்பத்தில் சேதமடைந்த வீடுகளை, அரசாங் கத்தார் மீண்டும் கட்டித் தந்து, பூகம்பம் 6.2 எக்டர் வரை யில் இவை தாக்குப் பிடிக்கும் என்றனராம். ஆனால் இன்று 4.2 எக்டர் நிலையிலேயே அனைத்தும் இடிந்து விழுந்து மக்களை விரட்டி அடித்தது. இதற்குக் காரணம் "தரக் குறைவுப் பொருள்கள் பயன்படுத்தியதால் இந்த வீடுகள் இடிந்துள்ளனவா என்ற மக்கள் கேள்விக்கு அரசியல் அலுவலர் (கலெக்டர்) அந்த முடிவுக்குத்தான் வரமுடியும் என்று கூறியதாகத் தினமலர்(20.12.95)செய்தி வெளியிட்டுள்ளது. ஆக நமது அரசும் அதன் வழிச் செயல் பாடுகளும்தாமே மக்கள் அவலநிலைக்குக் காரணமாகின் றன. இன்றும் தமிழ் நாட்டில் நடைபெறும் பல கலவரங் கள், சாதிச்சண்டைகள், பிற கொடுமைகள் அனைத்துக் கும் அரசு தானே காரணம் என்கின்றனர். எனவே அன்று சங்கப் புலவன் சொல்லிய, 'எல்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்பது எவ்வளவு மெய்யாகிறது. அண்மையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜய நகருக்கு அருகிலும் நிலநடுக்கம் வந்ததாகச் செய்தித்தாள் களில் கண்டேன். தமிழ்நாடு மட்டும் விட்டுவைக்கப் பெறுமா என அஞ்ச வேண்டியுள்ளது. ஆக, விந்திய மலைக்குத் தெற்கே, திண்ணிய நிலப்பகுதியில் நிலநடுக்கம் வராது என்று ஆய்ந்து கண்ட முடிவுகளெல்லாம் எதனால் மாறுகின்றன? நிலம் என்னும் நல்லாள் ஏன் நடுங்குகிறாள்? ஆம்! இத்தகைய கொடுமை வாய்ந்த பண்பாடற்ற, வாழ்க்கை நெறியற்ற மக்கள்' எனும் பெயரையுடைய மாக்களைத் தாங்க வேண்டியுள்ளதே' என ஆவலித்து அழுது நடுங்குகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/140&oldid=782428" இலிருந்து மீள்விக்கப்பட்டது