பக்கம்:நாடு நலம் பெற.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியில் ஒலமும் 153 மக்களே ஆராய்ந்து செயல்பட்டால் நாடு நலமுறும். வறுமை நீங்கி மக்களெல்லாம் மகிழ்ந்து வாழ்வர், எனவே எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற சங்கப் புலவர் வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையாகிறதன்றோ!.மேலும் 'மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர் பழிக்கும் இக்கன் அகல் ஞாலம்' என்ற சங்கப்பாடலும் எவ்வளவு உண்மையாகிறது. எல்லாவகைக் கொடுமைகளும் எல்லாரும் இந் நாட்டு மன்னர்’களாகிய மக்களும் அவர்கள் அனுப்பிய ஆள்வோ ரும் இழைக்கின்ற கொடுமைகளால் தானே!மழையில்லை. கடல் வளம் இல்லை. இயற்கை மாசுபடுகிறது. இவ்வாறு குருடன் சொல்லவில்லை. விரிந்த பார்வையுடையஅனைத்தையும் கண்டறிகின்ற ஞாலம் சொல்லுகிறது என்கிறார் சங்கப்புலவர் வெள்ளைக்குடி நாகனார். ஆம்! அவர் தூய்மையான வெள்ளைக்குடியில் பிறந்தவ ரன்றோ! . இன்று இலங்கையில் விடுதலைப்புலிகளை நசுக்கும் செயல் எனப் பல்லாயிரம் தமிழ் மக்களைப் பழி வாங்கும் கொடுமையைக் கண்டு இயற்கை சீற்றங்கொண்டு கடுமை யான பூகம்பத்தை (மத்தியமதாலே நகரில்) உண்டாக்கிய நிலையினைத் தின மலர் 11 12.95இல் (பக்கம் 9) வெளி யிட்டுள்ளது. விந்திய மலைக்குத்தெற்கே நிலம் திண்மைய தாகி விட்டமையில்- லெமுரியா கடல் கோளிலிலிருந்து தப்பிய அந்நிலப்பகுதி மிகத் திண்மையதாக-தொன்மை வாய்ந்ததாக உண்மையில் இங்கே என்றும் நிலநடுக்கம் வராது என்று ஆய்ந்து முடிவு கட்டிய அறிஞர் கூற்று дѣт — 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/155&oldid=782458" இலிருந்து மீள்விக்கப்பட்டது