பக்கம்:நாடு நலம் பெற.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i54 நாடு நலம் பெற பொய்த்து விட்டதே! எப்படி நிலமென்னும் நல்லாள்: கொடுமையை ஏற்றுக் கொள்வாள். அவள் நகுவாள். நல்லவர் சிரிப்பு அக்கிரமத்தை அழிக்கும். சிவபெருமான் சிரித்தே முப்புரங்களை அழித்தார். எனவே நிலமென்னும் நங்கையின் சிரிப்பே இலங்கையில் பூகம்பமாக வெடித்தது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வரும். ஆம்! இங்கே இது வரையில் நடவாத கொடுமைகள்- கொலைகள், வண்டி மோதல்கள், வெட்டுகள், கொள்கைகள், கட்சிச் சண்டைகள்- சாதிப் போராட்டங்கள் துப்பாக்கிச் குடுகள்- திடீர்ச் செல்வ வளர்ச்சிகள்-அநியாயச்செலவு கள் இன்னும் எத்தனையோ-தலைவிரி கோலங்கள் நடக் கின்றன. வேலியே பயிரை மேய்கின்றது என்பது போலக் காப்பார் கள்ளராகும் நிலை நாட்டில் நிலவும் போது இயற்கை நல்லாள் எப்படிச் சும்மா இருப்பாள்?கார்த்திகை மாதம் முற்றும் காய்கிறது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும் வற்றி வரண்டு நிற்கிறது.தஞ்சைத் தரணி மக்கள் தண்ணிருக்குத் தவிக்கின்றனர். இதற்கும் அடிப்படை தமிழக- கர்நாடக ஆட்சியாளர்கள் தாமே காரணமாகின்றனர். இப்படியே நாமே நமக்குமனிதனே மனித வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முடிவு தேடிக் கொள்ளுகிறான் என்றால் உலகம் என்று செம்மையுறும்? எண்ணிப் பாருங்கள் - நாடு திருந்த- நலமுற ஆவன காணுங்கள். தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ள ஆண் பெண் உடைகள், காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றதாக மட்டு மின்றி, வாழ்வுக்கு-நல்வாழ்வுக்கு-நாட்டு வாழ்வுக்கு வளம் சேர்ப்பதாகவே அமைந்துள்ளன. 'உண்பது நாழி உடுப்பது கான்கு முழம்' என்று ஒளவையார் (நல்வழி 28) பாடியுள்ளார். இது ஆடவருக்கு அமைந்த உடை, மகளி ருக்கும் இந்த வகையிலே புடவை அணியும் நிலை தொன்று தொட்டு அமைந்த ஒன்றாகும். கருவினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/156&oldid=782461" இலிருந்து மீள்விக்கப்பட்டது