பக்கம்:நாடு நலம் பெற.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 155 தாங்கி வளர்க்கும் மகளிர்தம் இடை-இடைக்குமேல் நான்கு அல்லது ஆறுவிரற்கிடை (3 அல்லது 4 அங்குலம்) எப்போதும் இயற்கையான காற்றுப் புகும் வகையில் ஆடை அமைய வேண்டும் என்பது முறை வயிற்றில் சிசு தோற்றுவதற்கும், அது நல்லபடி வயிற்றில் வளருவதற் கும், பிறப்பதற்கும் பிறந்தபின் சிறக்கச் செழித்து வளர் வதற்கும் அடிப்படை அக்காற்றோட்டமுள்ள இடையே யாகும். மேல் இடும் கச்சுடன் கூடிய இரவிக்கைக்கும் புடவை கட்டும் இடுப்பிற்கும் இடையில் மேற்கண்டபடி காற்றோட்ட நிலையே நன் மக்களைப்பெற நல்வழியை அமைக்கும். கிராம மக்கள் பெரும்பாலும் அத்தகைய ஆடை அணிவதையே பின்பற்றுவதால், ப்லர் மகப்பேற் றிற்கு மருந்தகம் நாடுவதில்லை. புடவை இடுப்பி லணிந்து, அதன் ஒரு பகுதியை மேல் இட்டு உடலை நன்கு மறைக்கும் அதே வேளையில், அந்த இடைவெளியினைக் காற்றோட்டம் பெறும் வகையிலே ஆடை அணியும் மரபே அவர்களுடையது. இன்று சில பெண்கள் உடலை முற்றும் மறைக்கும் தமிழ்நாட்டுக்கு முற்றும் மாறுபட்ட ஒர் உடையினை அணியத் தொடங்கி விட்டனர். அந்த உடையால் மறைக்க வேண்டிய மார்பகம் நன்கு தெரியும் வகையில் அமைகிறது. அது நம் பண்பாட்டுக்குக் களங்கம் தருவ தாகும். சிலர் அதற்காக ஒர் மேலாடை துண்டு போலப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் அதுவும் தேவையான பயனைத் தருவதில்லை.மேலும் இந்த இடைப்பட்ட இடுப் பினைக் காற்றோட்டமின்றிக் கட்டிப்போடுவதால் அவர் கள் பிற்காலத்தில் மகப்பேறு பெறுவதில் தடைகள், துன்பங்கள், பிற கொடுமைகளுக்கு ஆளாக நேரும், பழங்காலத் தமிழ் அறிஞர்கள் இந்த உண்மையினைத் தெளிந்து பாராட்டிப் போற்றி வந்தனர். இந்த நூற். றாண்டில் வாழ்ந்த பாரதி கூட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/157&oldid=782462" இலிருந்து மீள்விக்கப்பட்டது