பக்கம்:நாடு நலம் பெற.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156. - நாடு நலம் பெற 'தில்லித் துருக்கர்செய்த வழக்கமடி-பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்; வல்லி யிடையினையும் ஓங்கிமுன் னிற்கும்-இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்; என்று பாடியுள்ளார்.இப்பாடல் காதல் பற்றிய பாடலாக உள்ளமையின், பின்பகுதியாக மார்பையும் மூடுவது' பற்றிப்பாடுகிறார். அதனாலேயே கடைசி அடியில் கனி கண்டவன் தோல் உரிக்கக் காத்திருப்பானோ என்று பாடித் தம் காதல் பாட்டை முடிக்கின்றார். காதலுக்கு அது பொருந்தும். எனினும் அதனோடு 'வல்லி இடை யினை மறைத்தலையும் கண்டிப்பது, அது தேவையற்றவாழ்வு முறைக்கு மாறுபட்ட ஒன்றெனக் காட்டவே உடன் சேர்த்துக் காட்டுகிறார். எனவே வருங்காலத்தில் வளமாக வாழ வேண்டிய பெண்கள் உடையில் அந்த மார்பினைக் காத்தல் வேண்டுவது அவசியமாகும். இயற் கைச் சூழலும் தட்ப வெப்ப நிலையும் மாறுபட்ட நாட்டின் பிறபகுதிகளில் வாழ்வார் உடையினையும் பழக்க வழக்கத்தையும் நாம்-தமிழராகிய நாம் மேற் கொண்டால் இயற்கை அன்னை அதற்குரிய தண்டனை யைத் தாராதிராள். - இக்கட்டுரை அச்சேறிக் கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றினையும் இங்கே குறித்தல் வேண்டும். மனிதன் எவ்வளவு கீழ் நிலையில் செல்கின் றான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உலகில்அமைதி உலகில்-இது வரையில் காணாத ஒரு கொடும் நிகழ்ச்சி. 1995 டிசம்பர் 17ம் தேதி அடையாளம் தெரியாத விமானம் மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்தில் (Purulia District) Louijua Gusri & 5(5,0sonamujub பிறவற்றையும் விண்ணிலிருந்து மழை எனப் பொழிந்த கொடுமையைத்தான் குறிக்கின்றேன். பின் 22.12.95ல் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/158&oldid=782464" இலிருந்து மீள்விக்கப்பட்டது