பக்கம்:நாடு நலம் பெற.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நாடு நலம் பெற தகாத புகுமுறை பிற நன்கு கவனிக்கப்படவில்லை என்றும், இந்நிலை நீட்டித்தால் வருங்காலம் அஞ்சத்தக்க கொடும்ை வாய்ந்ததாக இருக்கும் என்றும் இம்மனிதக் கொடுமைகளைப் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 1.1.1996ல் தலையங்கத்திலேயே (பக்கம் 10) Lesson from Purulia என்ற தலைப்பில் திரு N.N. வோரா (N N.Wohra) அவர்கள் விளக்கமாக எழுதியுள்ளார். அவர்தம் இறுதி எச்சரிக்கை வாக்கியத்தை மட்டும் இங்கே அப்படியே தருகிறேன். ‘Let us hope that Purulia incident shall compel the Central authorities to undertake a comprehensive review of the national security apparatus and enforce prompt, effective and accountable performance by each of the agencies involved. Unless this is done most urgently grave dangers lie ahead'. - - நாட்டிலும் உலகிலும் கொடுமைகள் அதிகரித்து "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற ஆள்வோரும் பிறரும் செயலாற்றும் போது ஆண்டவன் அவதரித்து அறம் காத்து மறம் அழிப்பார் என்பது நமது கொள்கை. திருமாலின் பத்து அவதாரங்களும் முருகன் தோற்றமும் துர்க்கையின் சீற்றமும் பிறவும் அந்த வகையில் அமைந்த னவே. அவ்வாறு அவர்கள் செயலாற்றும்போது அக் கொடுஞ்செயல் புரிவோரை மட்டும் அழிப்பதில்லை; அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளே இல்லா வகையில் கடலால் கொள்ளச்செய்வர். இராவணன் தென் இலங்கை யும் சூரபதுமன் பெருநாடும் அவ்வாறே கடலால் கொள் ளப்பட்டன. எனவே கொடுமை மிகும் காலத்தில் இறைவன் தோற்றம் உண்டு என்பது எச்சமயத்தோரும் கொள்ளும் கொள்கையாகும் இருமால் அவதாரத்தில் இறுதி அவதாரம் கல்கியா கும். இதுபற்றி அண்மையில் வந்த ஒரு செய்தி கண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/160&oldid=782470" இலிருந்து மீள்விக்கப்பட்டது