பக்கம்:நாடு நலம் பெற.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 159 (தினமணி - செப்டம்பர் 22. 1995) இதை எழுதுகிறேன். மிகுந்த துன்பம் உயிர்களுக்கு உண்டாகும் வகையில் நாடு கெடுமானால் அப்போதே அவதாரம் உண்டு. ஆயினும் அந்த விளம்பரத்தில் கல்கி பிறந்து விட்டார் என்றே கூறப்பெறுகிறது. பூரீராமனுக்குப் பிறகு, பூரீகிருஷ்ண பரமாத்மாவுக்குப் பிறகு, இதுவரை ஏக்கத்தோடு எதிர் பார்த்திருந்த கடவுள் கல்கி அவதரித்து விட்டார்' என்று வெளியிட்டுள்ளார்கள். அவ்விளம்பரத்தில் குதிரையின் மேல் இறைவன் அமர்ந்து வாளை வீசத் தயாராக இருப் பதையும் படம் போட்டுக் காட்டுகின்றனர். இதுஎப்படிப் பொருந்தும் என்பது தெரியவில்லை. கலியுக இறுதியில் கல்கி தோன்றுவார் என்பதே அனைவர்தம் கொள்கை. அது மட்டுமன்றி அத்துடன் இந்த உலகமே அழிந்துவிடும் என்றும் தெய்வச் சிந்தனையாளர் நம்புகின்றனர். உலகம் முழுவதும் இன்றேனும் சூரபதுமன், இரணியன், இராவணன் போன்றோர்தம் நாடுகள் அழிந்து ஒழிந் தமை போன்று கொடுமைக்கு இலக்கான-கொடுமை புரிகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதிகள் மறைந்து ஒழியும் அதற்குமுன் எச்சரிக்கையாகவே பூகம்பங்கள் தோன்றி அறிவுறுத்துகின்றன. கல்கி மனித வயிற்றில் பிறக்க மாட் டார் என்பதும் தெரியவேண்டும்.இப்படியிருக்கச்செத்துச் செத்துப் பிறப்பதைத் தேவென்று பத்தி செய் மனப்பா றைகள்' என்று அப்பர் கூறியபடி யார் யாரையோ கடவுள் அவதாரம் என்று கூறுவதும் பொருந்தாத செயல். அவர்கள் இராம கிருஷ்ணரைப் போன்று இராமலிங் கரைப் போன்று மகான்களாக இருக்கலாம். ஆனால் கடவுளாக-கல்கியாக மாட்டார்கள். எனவே இத்தகைய நெறியும் மக்கள் சமுதாய வாழ்வுக்கு மாறுபட்ட்தே யாகும். இதை எண்ணி உண்மை இறை வழிபாட்டிலும் நடமாடும் தெய்வங்களாகக் கொள்ளும் மக்களுள் வேற் றுமை இன்றி வாழும் வகையிலும் மக்கள் செயலாற்ற வேண்டும். அதுவே உலகம் உய்ய உற்பாதங்கள் நீங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/161&oldid=782472" இலிருந்து மீள்விக்கப்பட்டது