பக்கம்:நாடு நலம் பெற.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் I61 இந்தக் காட்சி நடைபெற்றதெனச் செய்திகள் வந்துள் ளன. இதற்கு அறிவியலாளர் வேறு காரணம் காட்டுவர். இது தெய்வத்தன்மை அல்ல என்றும் கல்லின் தன்மை என்றும் வேறு பல வகையிலும் காட்டுவர். ஆனால் இந்த அறிவியலார் இத்தனை ஆண்டுகளாக இத்தன்மை அப்படி அக்கற்களுக்கு உண்டு என்று ஏன் கூறவில்லை? உண்மை எதுவாயினும் பலரும் செய்து கண்ட இந்தச் செயல் எண்ணத்தக்க ஒன்றாகும். தமிழ்நாட்டில் திருநா ரையூர் பொல்லாப்பிள்ளையார் நம்பியாண்டார் நம்பி படைத்த உணவினை உண்டார் என்பது புராண மரபு. அப்போது நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம்றி யோம். இந்தத் தெய்வம் பற்றிய செயலும் வருங்கால நிலையை உணர்த்துவதாகவே கொள்ள வேண்டும். அது நலமாயினும் இருக்கலாம். அவலமாயினும் இருக்கலாம். தன்னை மறந்து தொண்டு செய்வார் தந்ததை உண்டார் என்றால் நலமாகும். ஆனால் இன்று யார் யாரோநாட்டில் தீங்கிழைப்பார் உட்பட ஊட்டினார் என்றால் இதை ஒர் உற்பாதமாகத்தானே கொள்ள வேண்டி யுள்ளது. பயனைப் பொறுத்து இருந்து காண வேண்டும். - இறைவன் வெள்ளெருக்கு அணிகின்றவன். உலகுக்கு ஊறுவிளைக்க நினைத்த, கங்கை, அரவு, பெருநெருப்பு, ஆலகால்விடம் இவற்றைத் தான் ஏற்று, உலகம் உய்ய அருள் செய்தவன் ஆண்டவன். வெள்ளெருக்கும் அப்படியே. அதனாலே நாட்டில் வெள்ளெருக்கு அதிக மாகப் பூப்பதில்லை. ஆனால் இந்த ஆண்டு எங்கு நோக்கினும்- சாலை இருமருங்கிலும் பிறவிடங்களிலும் வெள்ளெருக்குத் தழைத்து, கொத்துக் கொத்தாய் பூத் திருப்பதை அனைவரும் காண்கின்றனர். கி.பி. 2000 இல் நகரையே உயர்வாக்க நினைக்கப் பேசும் சென்னை மாநகராட்சியின் தெருக்களிலே- தோட்டத்திலே இவை பூத்தால் தீமை வருவது என முன்னோர் உணர்ந்து அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/163&oldid=782477" இலிருந்து மீள்விக்கப்பட்டது