பக்கம்:நாடு நலம் பெற.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நாடு நலம் பெற அங்கெலாம் வளரவிடமாட்டார்கள். ஆனால் இன்று சென்னை நகரில் நான் தினந்தோறும் செல்லும் செனாய் நகர் பெருந்தெருக்கள் ஒரத்திலேயே இச்செடிகள் நன்கு வளர்ந்து கொத்துக் கொத்தாய் பூத்திருப்பதை நாள் தோறும் கண்டு கொண்டே செல்வேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? இவ்வாறு வெள்ளெருக்கு அளவின்றிப் பூக்கும் நிலை நாட்டுக்கு ஏற்றதன்று. மனிதன் தவறு இழைக்கும்போது, இயற்கை இவ்வாறு காட்சி தந்து, அவனைத் திருத்த முயல்வதுவே மரபாகும். ஆனால் இன்றைய மனிதன்தன் முடிவைத்தானே தேடிக்கொள்ளும் மனிதன் இந்த இயற்கை அன்னையின் எச்சரிக்கை ஏன் எண்ணிப் பார்க்கப் போகிறான்? இவன் செயல்கண்டு வள்ளுவர் கூறியாங்கு, 'நிலமென்னும் நல்லாள் நகும்' என்று தான் எண்ண வேண்டியுள்ளது. அக்கிரமம் மிகுந்தால் நல்லவர் சிரித்தே-இயற்கை பூத்தே உலகை அழிக்கும் நிலை நாடு அறிந்ததே. இறைவன் திரிபுரங்களைச் சிரித்தே அழித் தான். இவையெலாம் அறிந்தே மனிதன் இன்று தவறு கிறான் என்றால் இதன் பயன் அஞ்சத்தக்கதாக அன்றோ அமையும். நாடும் மனிதனும் எண்ணிப் பார்த்து, திருந்தி செம்மை நெறியில் வாழ முயன்றால் நல்லது. இன்றேல்... 24.1095 தோன்றிய முழுச்சூரிய கிரகணங்கள் பற்றி உலகிலும் நாட்டிலும் பலபல உற்பாதங்களைப் பற்றிப் பேசியும் எழுதியும் உள்ளனர். சூரியனை நாம் பார்ப்பது இருக்கட்டும். அதற்குரிய கருமை படர்ந்த கண்ணாடி போன்றவற்றை உபயோகிக்கும் வழியை சாதாரண ஒன்றும் கல்லாத கிராமவாசி கூட அறிவான். மேலும் அந்த நாளில் உணவுப்பண்டங்களும் பிறவும் கெடா திருக்கத் தர்ப்பைப்புல் அல்லது துளசியை அவற்றுள் இடுவதை எழுபது ஆண்டுகளுக்கு முன் என் இளமை யிலேயே கண்டிருக்கிறேன். ஊர்ப் புரோகிதர் அதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/164&oldid=782479" இலிருந்து மீள்விக்கப்பட்டது