பக்கம்:நாடு நலம் பெற.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாடு நலம் பெற கள் அனுப்பியவர் என்று கூறினேன். அவரும் தம் உயர் நிலை பற்றி எல்லாம் விளக்கி, ஊருக்கெல்லாம் வைத்தியம் செய்யும் தனக்கு, தன் நோய்க்கு மருந்து தெரியவில்லை என்பதனை வருத்தத்தோடு எடுத்துரைத் தார். நோய் நாடி, நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் புரியும் அடிகளார் அந்த நோய்க்கு மூலநிலை கண்டு, முற்றும் ஆய்ந்து தொடர்ந்து மருந்து கொடுத்து மூன்று மாதங்களில் முற்றும் குண மாகச் செய்தார். அப்பெருமருத்துவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. ஆண்டுதோறும் குருபூசைக்குச் சொற்பொழிவு ஆற்ற சேதுப்பிள்ளை வரும்போது, அவரும் அவர் காரிலேயே பிள்ளை அவர்களை அழைத்துக் கொண்டு வந்தும் விழாவிற் கலந்தும் மகிழ்ந்து செல்வார். இவ்வாறு எத்தனை எத்தனையோ சித்த வைத்திய - நாட்டுவைத்திய முறைக்கு எடுத்துக்கர்ட்டலாம். இவையே போதும் என்ற அளவில் நின்று மேலே செல்கின்றேன். சித்தர் வாழ்ந்த தெய்வத் தலங்கள் மூலிகை மூலம் செயல்படும் மருத்துவ் முறையைச் 'சித்த வைத்தியம்' என்பர். இந்த மூலிகைகளையெல்லாம் பதினெண் சித்தர்கள் கண்டு தெளிந்தார்கள் என்ற காரணத்தால் சித்தர்கள் 3000, 5000 ஆண்டுகள் வாழ்ந் தனர் என்பது மரபு வழிக்காட்டும் வரலாறு. திருமூலர், ஆண்ட்ொன்றுக்கு ஒரு பாட்டுப்பாடி மூவாயிரமாகிய தம் திருமந்திரத்தை எழுதினார் என்பர். அப்படியே கமல முனி, காலகண்டர் போன்ற பிற சித்தர்களும் ஐயாயிரம் ஆண்டுகள் வரையில் வாழ்ந்தார்கள் என்பர். அவர்கள் பல பாடல்களிலே இச் சித்த மருத்துவத்தை வடித்து வழங் கியுள்ளனர் என்பர். எனினும் டாக்டர் வேங்கடேசன் அவர்கள் தம் ஆய்வுக்கட்டுரையில் சித்தர்கள் காலம் கி.பி. 8 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை என அறுதியிட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/54&oldid=782577" இலிருந்து மீள்விக்கப்பட்டது