பக்கம்:நாடு நலம் பெற.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிதை வளமே நாட்டு வளம் 53 காட்டுவர். அதுவே ஏற்புடைத்தாகும். சங்க இலக்கியத் திலோ, தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களிலோ இச்சித்தர்கள் பற்றிய பேச்சே இல்லை. திருமூலரை மூன்றாம் நூற்றாண்டில் காட்டும் ஒர் ஆய்வு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும். மேலும் சித்தர்கள் முத்தி அடைந்த இடங்களே இன்று பெரும் வழிபாட்டுத் தலங்களாக விள்ங்குகின்றன என்பர். பழநி, தில்லை, வேங்கடம் போன்றவை. அவ்வாறு விளக்கமுற்று வளர்ந்தனவே என்பர். சித்தத்தைச் சிவன்பால் நிறுத்தி' 'உணர்ச்சி அச்சாக உசா வண்டியாகப் புணர்ச்சிப் புலன் ஐந்தும் பூட்டி- உணர்ந்தனை ஊர்கின்ற பாகன் உணர்வுடைய னாகுமேல் பேர்கின்ற தாகும் விறப்பு' என்றபடி, ஒரே. முகமாக இ ைரவனை எண்ணி வாழ்ந்த வர்கள் இச்சித்தர்கள் எனலாம். எது வரினும் வருக! அல்லது எது போயினும் போக என்ற உணர்வோடு, 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே என்று, எல்லாவற்றையும் அவன்மேல் இட்டு, அமைதியாக-ஒருமை உணர்வோடு வாழ்ந்த சித்தர்கள் பாடிய பாடல்கள் பல. அவற்றுள் சில இருபொருள் பயப் பனவாய்'இம்மை, மறுமை இரண்டினையும் விளக்கு வனவாக அமையும். அகத்தியர், திருமூலர் தொடங்கி எல்லாச் சித்தர்களும் இந்த சித்த மருத்துவ நிலைபற்றிக் கூறினர் என்பர். இந்த மூலிகைகளை உண்டதாலேயே அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தனர் என் பர். இவர்களைப் பற்றியெல்லாம் பல சித்த மருத்துவர் களும் தமிழ் அறிஞர்களும் பலவாக எழுதியுள்ளமையின் நான் அதிகமாக இங்கே கூறப் போவதில்லை. இன்றைய சொற்பொழிவுக்குக் காரணரான டாக்டர். க. வேங்க டேசன் அவர்களே தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/55&oldid=782579" இலிருந்து மீள்விக்கப்பட்டது