பக்கம்:நாடு நலம் பெற.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நாடு நலம் பெற என்ற தலைப்பில் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பல் கலைக்கழகத்தாரால் வழங்கப்பெற்றுள்ளார். மற்றொரு பேராசிரியர் திருமூலரைப் பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு சமய உண்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் தம் மூவாயிரம் பாடல்களில் விளக்கிய திருமூலர் இம்மூலிகைகளைப் பற்றியும் மக்கள் பெறும் நோய்கள் பற்றியும், அவை தீர்க்க உதவும் மூலிகைகள் வழிமுறைகள் பற்றியும் ப்ல பாடல்களில் விளக்கியுள்ளார். யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்பதை மற்றொரு சித்தராகப் போற்றப்பெறும் பட்டினத்தடிகள் 'பச்சிலை இடினும் பத்தர்க் கிரங்கி, மெச்சிச் சிவபத வீடருள்பவன்' என்கின்றார். மேலிருந்து-சிலந்தியாக இருந்து வில்வத்தழையை இறைவன்மேல் இட்டமையால் சோழமன்னனாகப் பிறந்து எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்தோனாய் மூன்றாம் நூற்றாண்டில் கோச்செங்கணான் என்ற மன்னன் விளங்கினான். எனவே வேறும் பச்சிலையே வீட்டுநிலை அளிப்பதென்றால்அரச வாழ்வு தருவதென்றால் நாட்டு வாழ்வில் அதன் பயன் சொல்லவும் வேண்டுமோ! அளவுக்கற்ற வகையில் பொய்மாயப் பெருங்கடல் புகுந்து நின்ற பலர் இன்று பொன்னாலும் வெள்ளியாலும், தேரும், கிரீடமும் பிறவும் செய்தும் உண்டியல் இலட்சக்கணக்கில் பிறர் காணா வகையில் கொட்டியும் வழிபடும் போலிச் சமயிகள், போல் அல்லாது, உண்மை அன்பர்கள் இடும் பச்சிலையி னையும் ஏற்று பரமன் அருள் செய்வான் என்பதே சித்தர் கள் கண்ட முடிவு, இந்த உண்மையினைக் கண்ணன் அர்ச்சுனனுக்கு, தனக்கிட்ட ஒரு சிறுமலர், கைலையில் இறைவன் காலடியில் இருப்பதைக்காட்டி உண்மை அன்பை வெளியிட்டதாக ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/56&oldid=782581" இலிருந்து மீள்விக்கப்பட்டது