பக்கம்:நாடு நலம் பெற.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 55 நோய்கள் இவ்வாறு பச்சிலை இட்டுப் பரமனைப் பரவுவாரைப் பற்றாது என்பதைத் திருமூலர் பல இடங் களில் காட்டியுள்ளார். - 'இருமலும் சோகையும் ஈளையும். வெப்பும் தருமம் செய்யாதவர் தம்பால தாகும் உரும்இடி நாகம் உரோணி கழலை தருமம் செய்வார் பக்கம் தாழகில்லாவே' என்பது அவற்றுள் ஒன்று. 'திருமந்திரத்தில் ஒரு மந்திரம் அறிந் தால் சாகாது வாழலாம்' என்ற பழமொழி நாட்டில் வழங்குவ தொன்றாகும். .. பிற்காலத்தில் வர்ழ்ந்த பாம்பாட்டிச்சித்தர், கொங் கணிச்சித்தர் போன்றோர் பாடிய நாட்டுப்புறப்பாடல் களை ஒத்த பாடல்களில் பல இருபொருள் கொண்டன வாய், இப்பச்சிலைகளால் விளையும் பயனை உள்ளடக் கியவாய் அமைந்துள்ளன. திருமூலர் திருமந்திரத்திலும் இவ்வாறு பலசொற்கள் நுனித்து ஆய்வார்க்கு விளங்கும் வகையில் அமைந்துள்ளன. இத்தகைய சித்தமருத்துவ நெறிகளை,இன்றைய ஆங்கில மருத்துவ உலகம் தெளிவாக -வெளிப்படச் சொல்லுவது போன்று, அன்று சொல்லா மையே அதன் சிறப்பு மங்கக் காரணமாயிற்று. 'மற்றவர்க் குச் சொன்னால் பலிக்காது' என்று கதை கட்டி, கற்றவர் அதையும் தம்மோடு மயானத்துக்கு அழைத்துச் சென்று விட்டனர். நான் இளைஞனாயிருந்த போது, என்னு டைய பாட்டியார் காமாட்சி அம்மாள் எலிக்கடிக்கு ஒரு மூலிகையைக் கண்டு வைத்திருந்தார்கள். பலரும் அவரிடம் வந்து பயன்பெற்றுச் செல்வார்கள். அவர் ‘எலிக்கடி என்று வந்தவர் சொன்னவுடன் புறக்கடை சியில் சென்று ஏதோ பச்சிலையைக் கொண்டு வந்து உருத்தெரியாது கசக்கி அதை உண்ணச் செய்வார்கள். எலிக்கடி விடமும் நீங்கும். அது என்னவென்று நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/57&oldid=782583" இலிருந்து மீள்விக்கப்பட்டது