பக்கம்:நாடு நலம் பெற.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகைவளமே நாட்டு வளம் 57 விட்டு அரைமணிக்குப் பிறகு மறுபடியும் தேய்த்தேன். வீக்கம் நீங்கிற்று; அரிப்பும் இல்லை. எழுந்து சிற்றுண்டி உண்ணச் சென்றோம். வழியில் அது என்ன மந்திர இலை- இவ்வளவு எளிதாக இந்த வலியைப் போக் கிற்றே என்று கேட்டார். நான் மூடி மறைக்கவில்லை. "அது வேறொன்றுமில்லை. 'குப்பைமேனிக் கீரைதான் என்று சொன்னேன். அவர் வியந்தார்.இத்துணைச் சிறந்த மூலிகையை மக்கள் மதிக்கவில்லையே என வருந்தினார். இதனால்தான் என்றும் நான் மேலே காட்டிய நெல்லி ருக்க உமிகுற்றும் மக்களை விளக்கிருக்க மின்மினிக் காயும் மக்களை நினைந்து பார்க்க வேண்டும் என்றேன். அன்றைய பல்கலைக்கழகக் கூட்டத்தில்தான் நானும் அவரும் வற்புறுத்த, மூலிகைப்பண்ணை அமைக்க முடிவு எடுக்கலாயிற்று. புது இடத்தில் பல ஏக்கர் அதற்கு ஒதுக் கினோம். இன்று அது வளர்ந்து பலருக்கும் பயன் விளைத்து வரும் என எண்ணுகிறேன். அன்று தொடங் கியபோது அதைக் காத்து ஒம்ப-அது பற்றி விளக்க-அதன் பயனை யாவருக்கும் அளிக்க ஒரு சித்த மருத்து வர்- சட்டப்படி தகுதி பெற்ற ஒரு மருத்துவர் எங்களுக் குக் கிடைக்கவில்லை. வேறு துறையில் வல்ல ஒரு மருத்து, வரையே அத்துறைக்குத் தலைவராக்கினோம். இன்று: ஒளவையார் என்ன செய்திருக்கிறாரோ! நான் அறியேன். இக்குப்பைமேனியைப் பற்றி மூலிகை வகுப்பு (Materia Medica) 56ùIG GstaršG@pgi. (uš–270-272) வடமொழியில் இதை 'மார் ஜால மோகினி' என்பர், -ošosuššā ‘Acalypha Indicaecats Struggle' arcăuff போலும். இதன் பயனை மூன்று பக்கங்களில் நன்கு விளக் கியுள்ளனர் (மூலிகை வகுப்பு) "தந்தமூ லம்பிணிதீத் தந்திடுபுண் சாவவிடம் உந்துகுன்மம் வாதம் உதிரம்- வந்திழை நா-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/59&oldid=782587" இலிருந்து மீள்விக்கப்பட்டது