பக்கம்:நாடு நலம் பெற.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாடு நலம் பெற சூலஞ்சு_வாசம் தொடர்பீத சங்கபம்போம் ஞாலங்கொள் மேனி அதனால்' - ダ (தேரையர் குணவாகடம்)" என்று வெண்பாவ்கையில் இதன் சிறப்பை நன்கு விளக்கு கின்றார். இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்துச் சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர, குணமாகும்'. இலைச்சாற்றை எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிக் வலிக்குத்தேய்த்து வரலாம். இலையை அரைத்து புண், நஞ்சுக்கடி இவைகளுக்குப் போடலாம் இலையுடன் உப்பு சேர்த்துச் சாறுபிழிந்து, தினந்தினம் காலையில் இரு மூக்குகளிலும் நசியமிட்டு, குளிர்ந்த நீரில் மூழ்கி வர வெறி நோய் நீங்கும். 'இலையை அரைத்து.மேகப்புண்களுக்குக் கட்டலாம்' என்றும் இன்னும் பலவகையிலும் எங்கும் எளிதில் கிடைக் கும் குப்பைமேனி இலையின் குணத்தை - நோய் நீக்கும் திறத்தைப் பலபடக்காட்டியுள்ளனர். புண் என்றால்-கடி என்றால் நூற்றுக்கணக்காகச் செலவிட்டு ஊசியிட்டுக் கொண்டும், உள் மருந்து பலவேண்டியும் பலவற்றைப் பூசியும் வாழும் நாகரிக மக்களுக்கு 'குப்பைமேனி'-அவர் கள் வீட்டு வாயிலில் காணும் குப்பைமேனி வீணானது எனத் தோன்றலாம். அது அவர்கள் செய்த பாவம்வினை. யாரும் குப்பைமேனியினையும் அது போன்ற மூலிகைகளையும் பயன்படுத்தி வாழின் நலமுண்டு. இவ்வாறு இன்னும் எத்தனை மூலிகைகளைப் பற்றி யும் அவை பற்றிக் காட்டிய சித்தர்களைப் பற்றியும், பிறர் பாடல்கள் பற்றியும் எண்ணற்றவை காணலாம். வருமுன் காக்கவும் வந்தபின் காக்கவும் வழிகாட்டும் பிற்கால இலக்கியங்களில் இரண்டொன்று கண்டு மேலே செல்லலாம். - தேரையர் பாடல்களும் பிறவும் தேரையர் போன்ற மருத்துவத்துறை வல்லவர்கள் பாடிய பாடல்களில் இயமனே அருகில் வர அஞ்சும் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/60&oldid=782591" இலிருந்து மீள்விக்கப்பட்டது