பக்கம்:நாடு நலம் பெற.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாடு நலம் பெற MSBBSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - - ----- திருமேவு புதனுக்கு மிடுபுத்தி வந்திடும் செம்பொனுக்கு உயர் அறிவுபோம் செல்வமுண்டு ஆயுள் உண்டாம் (அரப்பளிசுர சதகம் 50) என்று மூழ்கும் நாளுக்குப் பயன்கூறி, ஒரு வேளை அந்த நாட்களில் மூழ்க வேண்டி நேர்ந்தால்- அது அத்துணைச் சிறப்பின்றாயினும், அவசியம் உண்டானால் அதற்குப் பரிகார வழிகளும் சொல்லி அப்பாடல் முடிகின்றது. எண்ணெயில் செம்மண் இட்டுத் தைலம் தலைக்கிடுதல், போன்று பரிகாரங்கள் உள்ளன. இவ்வாறு பிற்காலத்திய பாடல்கள் பல மக்கள் நல்வாழ்வை மனத்தில் கொண்டே நல்லவர்களால் பாடப் பெற்றுள்ளன. தேரையர். நோயனுகா வழிக்குப் பல பாடல்கள் பாடுகின்றார். இவ்ர் காலம் சற்றேறக்குறைய 400 அல்லது 500ஆண்டு களுக்கு முற்பட்டிருக்கலாம். இவர் தெலுங்கில் மருந்து முதலியவற்றைப்பற்றி அழகாகப்பாடிய வேமனரை குறிப் பிடுவதால், இவர் வேமனருக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. வேமனார் காலம் 1380க்கும் 1505க்கும் இடைப் பட்டது எனலாம். தேரையர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை அறிந்தவர். அவர் மருந்து, மற்றவைகளைப் பாடிய பல பாடல்கள் 'வேமன பத்யம் எனவே வழங்க வெளியிடப்பெற்றுள்ளது. அப்பாடல்கள் அனைத்துள் பல நூறுகள் தமிழிலும் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன. அக்காலத்தவரான நம் தேரையர் நல்வாழ்வு, வாழ-நமனார் வராதிருக்க வழி காட்டிப் பல பாடல்கள் எழுதுகின்றார். அவற்றுள் ஒரு சில காண்போம். தேரையர் காலம் இன்றைக்கு நானூறு ஆண்டு களுக்கு முற்பட்டதென்று கண்டோம். வேம்னரைப் பற்றி இவர் கூறி இருத்தலால் இவர் அக்காலத்துக்குப் பிற்பட்டவர் என அறிந்தோம். மற்றொரு சான்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/62&oldid=782595" இலிருந்து மீள்விக்கப்பட்டது