பக்கம்:நாடு நலம் பெற.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 61 உள்ளது. இவர் உருளைக் கிழங்கு பற்றிக் குறிப்பிட்டுள் ளார். இவ் உருளைக்கிழங்கு நம் நாட்டிற்கு (மிளகாயைப் போல்) பதினான்காம் நூற்றாண்டில் இறக்குமதி செய்யப்பெற்றது. எனவே இவர்க்ாலம் அந் நூற்றாண்டிற்குப்பிற்பட்டதென்பர்.இவர் சிறந்த சைவர் என்பது இவர்தம் பாடல்கள் வழி நன்கு அறியலாம். இவர் பிறந்த ஊர் எது எனத் தெரியாவிடினும் இவர் தொண்டை நாட்டைச்சேர்ந்தவ்ர் என அறிய இடமுண்டு. இவருடைய ஆசிரியர் பெயர் தரும செள்மியர் என்றும் அவரும் தொண்டை நாட்டவர் என்றும் கூறுவர். இவர் தம் நூல்களுக்கு, யமக அந்த்ாதி போன்ற அனைத்துக்கும் தெளிவான நல்ல உரைகள் எழுதப்பெற்றுள்ள்ன். அவ்வுரைகள் இல்லையாயின் இப்பாடல்களின் பொருள்ை இன்று யாராலும் அறிந்து கொள்ள இயலாது. ஆயினும் அந்த உரைகளை எழுதிய ஆசிரியர் பெயரேர் விர்ோ நாடோ எவை எனத்தெரியா. இப்படி ஊர் வ்ேண் டாது பேர் வேண்டாது' தம்மை மறந்து, நாடு நலம் பெற்று வாழ அவர்கள் எல்லோரும் செய்த தொண்டின்ன்-சித்த மருத்துவம் பற்றிய சிறப்பினை நாம் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லையே. இவர்களைப் பற்றி-தேன்ரயர் நூல்கள் பற்றியும், உரையாசிரியர்கள் பற்றியும், தேரையர் யமக அந்தாதியினை வெளியிட்ட டாக்டர் தியாகராசன் அவர்கள் (பாளையங் க்ோட்டைக் கல்லூரியின் முதல்வராயிருந்தவர்) தம் முன்னுரையில் விளக்கமாக எழுதியுள்ளனர். இந்நூல் 10-10-1991இல் வெளியிடப் பெற்றுள்ளது. இது போன்றே இன்னும் பல ஒலைச்சுவடிகளாகவே உள்ளன. அவை என்று வெளி வருமோ-அச்சிட்டும் கிடைக்கப் பெறாத நூல்கள் மறுபடி எப்போது அச் சேறுமோ என்று உளம் வருந்தி டர்க்டர் தியாகராசன் கவலைப்பட்டு வருந்துகிறார். நாடு பதில் சொல்லுமா? அரசாங்கம் ஆவன செய்யுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/63&oldid=782597" இலிருந்து மீள்விக்கப்பட்டது