பக்கம்:நாடு நலம் பெற.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாடு நலம் பெற தேரையர் பாடல்களின் சிறப்பு நான் என் இளமையில் வாலாஜாபாத் இந்து மத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த ஞான்று (192528) அதில் பல பிரிவுகள் இருந்தன. மணிவாசகர் சபை' என்ற தெய்வச்சபையும், வீமன் விளையாட்டுப் படை' என் விளையாட்டரங்கமும் திருவள்ளுவர் தொழிற் சாலை' எனப் பாய் முடையும் துணி நெய்யும் பகுதிகளும் இருந்தன. அது போன்றே தேரையர் மருத்துவச் சாலை' எனவும் ஒன்று இருந்தது. வள்ளுவர், வீமன், மணிவாசகர் போன்று இதுவும் ஒரு பெயர் என்ற அளவிலும், அவர் மருத்துவ வல்லவராக இருந்தமையினாலே அம் மருந்தகத் துக்கு அப்பெயர் இட்டனர் எனவும் அந்த அளவிலேயே அன்று நான் அறிந்து நின்றேன். ஆனால் பின்பு பல ஆண்டுகள் கழித்துத் தேரையர் பாடிய பாடல்களையும் வேமனர்தம் தமிழாக்கப் பாடல்களையும் பார்த்த போது இத்தகைய வித்தகர் காட்டும் வழிகளில் நம் மக்கள் வாழ்ந்தால் நோய் நாட்டை விட்டே ஓடிவிடும் அல்லவா என நினைத்தேன். தேரையர் மருத்துவ பாரதம் என்றே ஒரு நூல் பாடியுள்ளார். இசையோடு, தாளம் பொருந்தசிந்து வகைப்பட பலவகையில் இவர் பாடல்கள் அமைந் துள்ளன. அதில் பாண்டவர் ஐவரையும் மருந்துகளாகவும் துரியோதனாதியர்களை நோய்களாகவும் கண்ணனை மருத்துவனாகவும் காட்டி, அப்பாரதக்கதை சிறிதும் பிறழாவகையில் அதை அப்படியே சிலேடைப் பொருளில் மருத்துவ நெறிக்கு உரிய்தாக்கிக் காட்டுகின்றார் இந்நூல் இப்போது கிடைக்கின்றதா என்பது தெரியவில்லை. அவர் பாடிய வேறு சில பாடல்களை இங்கே காட்டி அமைகின்றேன். - 'பாலுண்போம் எண்ணை பெறில் வெந்நீரில் குளிப்போம் பகல்புணரோம் பகல்துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியொரு இளவெயிலும் விரும்ப்ோம் இரண்டடக்கோம் ஒன்றைவிடோம் இடதுகையில் - - படுப்போம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/64&oldid=782599" இலிருந்து மீள்விக்கப்பட்டது