பக்கம்:நாடு நலம் பெற.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 63 மூலம்சேர் கறிநுகரோம் மூத்ததயிர் உண்ணோம் முதல்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம் ஞாலம்தான் வந்திடினும் பசித்தொழிய அருந்தோம் கமனார்க்கு இங்குஏது.அவை காமிருக்கும் இடத்தே' உண்பதிரு பொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம் உறங்குவது இராவொழியப் பகல்உறக்கம் . . * . கொள்ளோம் மண்பரவு கிழங்குகளில் கருணை அன்றிப் புசியோம் வாழை இளம்பிஞ்சொழியக் கனிஅருந்தல்

  • செய்யோம் பெண்கள்தமைத் திங்களுக்கோர் காலமன்றி மருவோம்

ப்ெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்துநீர் . அருந்தோம் நண்புபெற உண்டபின்பு குறுந்டையும் கொள்வோம் நமனார்க்கு இங்குஏது அவை நாமிருக்கும் இடத்தே ஆறுதிங்கட் கொருதடவை வமன மருந்து அயிர்வோம் அடர் நான்கு மதிக்கப்பால் பேதியுரை நுகர்வோம் தேறுமதி யொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம் திங்களரைக் கிரண்டுதரம் சலன விறுப்புறுவோம் வீறு சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம் . விழிகளுக்கஞ் சனமூன்று நாட்கொருகா லிடுவோம் நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம் جی - நமனார்க்கு இங்குஏது.அவை நாமிருக்கும் இடத்தே' என்றும் இன்றும் பலவகையிலும் நோயனுகா விதி யினைத் தேரையர் கூறியதோடு, நோய் நீக்கத்திற்கும் பல வழிமுறைகளை வகுக்கின்றார். இப்பாடல்களெல்லாம் நான் இந்துமத பாடசாலையில் படித்தபோது தேரையர் மருத்துவசாலை முகப்பில் எழுதி இருந்ததை மனப்பாடம் செய்தேன். அவற்றை இங்கே தருகின்றேன். ஒருவேளை பிழைகள் இருப்பின் திருத்தி ஏற்றுக்கொள்ள வேண்டு கிறேன். - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/65&oldid=782601" இலிருந்து மீள்விக்கப்பட்டது