பக்கம்:நாடு நலம் பெற.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாடு நலம் பெற அந்நூல்களில் இரட்டுறமொழியும் பல பாடல்கள் உள் ளன. சாம்பிராணி பூ அளைய சாம்பிராணி பூஅஃதே' என்ற தொடரில் முதலில் சாம்+ பிராணி + பூ அளையஎனப்பிரித்தும் மரணத்துடன் போராடுகின்ற உயிரானது பூவுலகில் வந்து சேர எனப்பொருள் கொண்டு, பின்ன தற்கு அது சாம்பிராணியின் சாம்பலைப்போல் கெடும் என்று பொருள் கொள்ளலாம். அப்படியே, - 'நெல்லிக்காய் விளையும் நாட்டு நெல்லிக்காய் தைலம் கேள்’ என்பதில் முதல் தொடர் நெல்+இக்காய்+ விளையும் நாட்டில் எனப்பிரித்து, நெல் கரும்பைப்போல் விளையும் நாட்டினின்றும் நெல்லிக்காய் தைலம் கொள்ள லாம் என்று உரை காண்பர். இவ்வாறு பலபாடல்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. மருத்துவ பாரதத்தில் எல்லாப் பாடல்களுமே இவ்வாறு இரட்டுற அமைந்து பாரதக்கதையாகவும் அதே வேளை உடல்நலம் பேணும் மூலிகைக் கதையாகவும் அமைவதைக் காணமுடியும். இன்னும் எத்தனையோ நூல்க்ள் தமிழில் சித்த மருத்துவம் பற்றி வெளிவந்துள்ளன, டாக்டர் வேங்கடேசன் அவர் கள் சித்த மருத்துவம் பற்றிய அவர் நூலில் பின்னிணைப் பாக இம்மருத்துவம் பற்றிய நூல்களைப் பட்டியலிட்டே தருகின்றார் (563-517). பதினான்கு பக்கங்களில் 400க்கு மேற்பட்ட புத்தகங்களை, பெயர், ஆசிரியர் பாடல் எண்ணிக்கை இவைகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற் றுள் அச்சிட்ட நூல்களுள் பலவும் இன்று கிட்ைப்பதரிதா கின்றன. தமிழ்நலம்- தமிழ்மரபு- தமிழ் நாகரிகம்தமிழ்ப் பண்பாடு இவற்றைக் காப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசாங்கம் அதற்கென வாரியம் போன்ற அமைப்பையும் இட்டு, அதற்குச் சிலரைப் பொறுப்புடையராக்கி நிற்கும் அரசாங்கம் இத்தகைய தமிழர் நல்வாழ்வைப் போற்றும் பழம் பெரு நூல்களை அச்சிட்டு நாட்டுக்கு வழங்கினால் நற்பயன் விளையும். சித்தமருத்துவத்தில் வல்லவரைக் கொண்டு சிலவற்றிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/66&oldid=782602" இலிருந்து மீள்விக்கப்பட்டது