பக்கம்:நாடு நலம் பெற.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் . 65 йпїніппінив உரையும் எழுத வேண்டும். அரசாங்கமும் தமிழ்ப் பல் கலைக்கழகமும் இத்தகைய அரிய பணியினை விரைந்து செய்ய வேண்டும்ெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தழைத்த இச் சித்தமருத்துவம் இடைக்காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது. இன்று உயர்நிலைப் பட்டம் பெறும் நெறிவரையில் ஒரளவு உயர்வு பெற்றுள்ளது. இதற்குக் காரணமானவர்களையெல்லாம் இங்கே நினைவுகூர்தல் தக்கதும் ஏற்றதுமாகும் என எண்ணு கிறேன். . காட்டு மருந்துக்கு கல்லுயிர் தந்தவர் சென்னை ராஜதானியாக, ஒரிசாவின் கஞ்சம் தொடங்கி மேற்கே நான்கு மாவட்டங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழி பேசுவோரைக் கொண்ட பெருமாநிலமாக விளங்கிய அந்தக் க்ாலத்தில்- ஆங்கிலேயர் ஆட்சியில் சித்த மருத்து வமோ,ஆயுர்வேத மருத்துவமோ,யுனானியோ பேசப்பெற வில்லை. என்றாலும் தமிழ் நாட்டில் மட்டும் நாற்பதா, யிரத்துக்கும் மேற்பட்ட சித்த வைத்தியர்கள் இருந்தனர். அப்படியே மாநிலப் பிறபகுதிகளிலும் இருந்திருப்பர். ஆங்கில அரசு இந்த மருத்துவ நெறிகளைப் பற்றி யெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. நம் நாட்டின் சில தலை சிறந்த பெரிய டாக்டர்'கள் கூட இவை பற்றி எண்ணவில்லை. ஆயினும் ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக்கட்சி அமைப்பில், பனகல் அரசர் பொறுப்பில் அரசாங்கம் இருந்த போது, இது பற்றிய எண்ணம் அவருக்கும் அவரைச் சேர்ந்தோர்க்கும் உண்டாயிற்று. ஆந்திர எல்லையில் நல்ல பண்பாட்டுக் குட்பட்ட சிறந்த குடும்பத்தில் பிறந்த அவருக்கு இந்திய மருத்துவங்களை வாழவைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/67&oldid=782604" இலிருந்து மீள்விக்கப்பட்டது