பக்கம்:நாடு நலம் பெற.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாடு நலம் பெற அன்றைய ஆங்கில அரசுக்கு அது விருப்பமின்றேனும், பனகல் அரசர் செயலுக்கு இசைவு தந்தது. அவர். 1.7.1924இல் கான்பகதூர் முகமது உஸ்மான் சாயபு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தார்; அது 'உஸ்மான் கமிட்டி' என்றே வழங்கப்பெற்றது. அதில் அன்னிபெசண்டு அம்மையாருக்கு உதவியாளராகவும் உற்றவராகவும் இருந்த சிறந்த மருத்துவர் கேப்டன் சீனிவாசமூர்த்தி (கன்னடவர்) செயலராக இருக்க, வேறு சிலரும் உடன் அமைய இந்தியா முழுவதையும் சுற்றி, இந்திய மருத்துவங்களாகிய, சித்த, ஆயுர்வேத, யுனானி முறைகளைப் பற்றி ஆராய்ந்தனர். கும்பகோணம் சிகா மணிப்பண்டிதர் வி. பொன்னுசாமிப்பிள்ளை, பண்டிதர் R.M.K. வேலுசாமிப் பிள்ளை ஆகியோர் சித்தமருத் துவம் பற்றிய விளக்கம் தந்தனர் போலும். பின் முதன் முதல் எழும்பூரில் இன்றைய காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ள இடத்தின் பக்கத்தில் தம்புவிலா என்ற இடத்தில் இந்திய மருத்துவப் பள்ளி' (Indian Medical School) எனத் தொடங்கப்பெற்றது. பண்டித வீரராகவப் பெருமாள் பிள்ளை, S.E.W. தாஸ் போன்றார் முயற்சியில் அப்பள்ளி தொடங்கப் பெற்றதென்பர். அதில் சித்த மருத்துவத்துக்காக திரு. C.S. முருகேச முதலியார் அவ்ர்களும், ஆயுர் வேதத்துக்கு திரு. சங்குண்ணி மேனன் அவர்களும் (சமஸ்கிருதம், தெலுங்கில் வல்லவர்) தெலுங்குத் துறைக்கு திரு. மாதவமேனனும் நியமிக்கப் பெற்றனர். கேப்டன் சீனிவாசமூர்த்தியே அனைத்துக்கும் தலைவராக இருந்தனர். இவ்வாறு 1924ல் சித்த மருத்துவப் பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் பனகல் அரசர் முயற்சி யால் தொடங்கப்பெற்றது. (அங்கு ஆங்கில மருந்துகளும் சேர்த்துத் தந்தனர் என்பர்.) பின் பனகல் அரசர் தாம் சூனாம்பேடு ஜமிந்தாரிடம் வாங்கித் தன் வாழ்மனையாகப் பயன்படுத்தி வந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/68&oldid=782606" இலிருந்து மீள்விக்கப்பட்டது