பக்கம்:நாடு நலம் பெற.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 67 பரந்த இடத்தினை மிகக் குறைந்த மதிப்பீட்டில் அரசாங் கத்துக்குத் தந்து, அதில் இந்திய மருத்துவப் பள்ளியை 1926ல் மாற்றி அமைத்தார். அதன் பிறகு பெயரளவில், பள்ளி கல்லூரி எனப் பெயர் பெற்றது. அங்கு டிப்ளோமா (Diploma) பட்டம் பெற வாய்ப்பும் உண்டாக்கப்பெற்றது. அது வளரவளர, மாணவர் தொகை.பெருகிற்று. மாணவர்கள் அதைப் பட்டப்படிப்பாக மாற்றக் கிளர்ச்சி செய்தனர். முதலில் மருந்தகமாக மட்டும் இருந்து, பின் பள்ளியாகி, பின் டிப்ளோமா' பட்டம் வழங்கு கல்லூரியாகியும், பட்டம் தரும் நிலை வரவில்லை யாதலால், மாணவர்கள் பெரும் கிளர்ச்சி செய்தனர்.சென்னைப் பல்கலைக்கழகம் முதலில் மறுத்த போதிலும், பின் மாணவர் கிளர்ச்சிக்கு வளைந்து கொடுத்தது. 1958-இல் பட்டங்கள் (Degree) வழங்கும் கல்லூரியாக மாற்றிற்று. இதற்கு மாணவர் மட்டுமன்றி நாட்டிலிருந்த நாற்பதாயிரம் பரம்பரை வைத்தியர்களும் கிளர்ச்சி செய்தனர். முடிவு நல்லதாக அமைய, இந்திய நாட்டுச் சித்த, ஆயுர்வேத மருத்துவர் களும் பிறரைப்போன்று பட்டம் பெற வாய்ப்பு உண்டா யிற்று. கல்லூரிகள் வளர்ச்சி . இத்தகைய நிலைக்கு இந்திய நாட்டு மருத்துவர் ©(pasto (Central Council of Indian Medicine) $34, 2–56% செய்தது. சித்த, ஆயுர்வேத யுனானி மூன்று பட்டப் படிப்புக்கும் தக்கவர்களைக் கொண்டு அக்குழு பாடத் திட்டங்களை வகுத்துச் செயலாற்ற வழிவகுத்தது. பின், அது கல்லூரி , நிலைபெற்றபின் சித்த மருத்துவக் கல்லூரிக்குச் சென்னையைக் காட்டிலும் மூலிகைகள் அதிகம் உள்ள மலைப்பகுதிகளே ஏற்றதாகுமென அரசு முடிவு செய்தது. இராஜாஜி ஆட்சியில் காமராஜரும் உடனிருக்க, அமைச்சர் சோதி வெங்கடாசலம் அவர்கள் முயற்சியில் குற்றாலத்தில் இடம்பெற முயன்றனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/69&oldid=782608" இலிருந்து மீள்விக்கப்பட்டது