பக்கம்:நாடு நலம் பெற.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாடு நலம் பெற பழைய குற்றாலத்துக்கு அருகே பரந்த இடம் ஒன்று தேர்வு செய்யப்பெற்றது. பின் ஏனோ அதுவும் விடப் பெற்றது. பாளையங்கோட்டையில் அச்சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ஏற்படாயிற்று. சென்னையிலிருந்த பேராசிரியர்களெல்லாம் அங்கே சென்று, பட்ட பகுப்பு. மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தந்தனர். அங்கே கல்லூரி மட்டுமன்றி அதைச்சார்ந்த மருந்தகத்தும் நூறு படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை ஒன்றும் அமைந்தது. ஒ ைல ச் சுவடி க ைள வெளிக்கொணர, அக்காலத்து அரசும், பேராசிரியர்களும் பெரிதும் முயன்றனர். ஒரு சில நூல்கள் வெளிவந்தன என எண்ணு கிறேன். பின் திராவிட கழகங்கள் ஆட்சிப்பொறுப் பினை ஏற்றபோது, அக்காலத்தில் நலத்துறை அமைச்ச ராக இருந்த பேராசிரியர் அன்பழகனும் பின் புரட்சித் தல்லவர் எம்.ஜி. இராமச்சந்திரனும், சித்த வைத்தியக் கல்லூரி வளர ஆவன செய்தனர். அவர்கள் காலத்திலே தான் அண்ணாநகரில் இந்திய மருத்துவக்கல்லூரியும் மருந்தகமும் உண்டாயின. சித்த மருத்துல்த்துக்கு மட்டும் 50 மாணவர் சேர்க்கப்பெறுகின்றனர் என அறிகிறேன். மருந்தகத்திலும் இருநூற்றுக்கு மேற்பட்ட படுக்கைகள் உண்டு. பின் பழநியிலிருந்த மருந்தகமும் இங்கே கொண்டு வந்து இணைக்கப்புெற்றது. பின் மத்திய அரசும் இந்த இந்திய நாட்டு மருந்தகங் களும் கல்லூரியும் வளரப் பெரும் உதவி செய்தன என்பர். (Central Council of Indian Medicine) @#6tu 90 &mdo அமைக்கப்பெற்ற இந்திய நாட்டு மருந்தகக்குழுவும் இங்கே இருந்து இதன் வளர்ச்சியில் பங்கு கொண்டு Qguson is audiosi, Dj. ‘Bachelor of Indian Medicine’ என்ற இந்திய மருத்துவ அறிஞர் பட்டம் வழங்கப் பெற்றுச் சில ஆண்டுகள் கழிந்தபின், அறுவைக் கெனவும் ஒரு பகுதி தேவையாயிற்று. பழங்காலத்தில் கிராமத்தில் இந்திய மருத்துவர்கள். பெரிய கட்டிகளையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/70&oldid=782612" இலிருந்து மீள்விக்கப்பட்டது