பக்கம்:நாடு நலம் பெற.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 69 அறுத்து மூலிகை மருந்திட்டு, தேவையாயின் சுட்டுச் செம்மைப்படுத்தியுள்ளனர். தமிழில் வெந்த புண்ணுக்கு வினை இல்லை என்ற ஒரு பழமொழி இன்றும் நாட்டில் வழக்கத்தில் உள்ளது. எனவே சித்த வைத்தியம் மேலும் மருந்து கொடுப்பதோடு நிற்காது, அறுவைச் சிகிச்சைக் கும் ஆவன செய்து ஆற்றும் திறன் உடையது என நிறுவ முயன்றனர் சிலர். அதன் பயனாக வெறும் மருந்தளிக்கும் மருந்தகம் மட்டும் இல்லாமல் அறுவைச் சிகிச்சை அளிக் கும் பாடங்களும் செயல்முறைகளும் சேர்க்கப்பெற்றன. பட்டத்தின் பெயர் முறையினையே மாற்றினார்கள். வெறும் B.I.M' என இருந்த பட்டம் பின் B.I. M. & S. என மாறியது. 'S' என்பது Sugery யைக் குறிப்பதாக கும். இவ்வாறு நாளடைவில் இந்த நூற்றாண்டின் பிற் பகுதியில் சித்த மருத்துவமும் அதனோடு சேர்ந்த பிற இந்திய மருத்துவ முறைகளும் வளர்பிறை என வளர்ந் தன. இன்றைய கிலை தற்போது சித்த மருந்தகத்தில் வெறும் பட்டப்படிப்பு மட்டுமன்றி, மேனிலைப் பட்டம் பெறவும் (P.C. Degree) வாய்ப்பு உண்டாகியுள்ளது. மேலும் M.D. என்ற பட்டமும், பிற மருந்தகத்துறை மருத்துவர்களுக்கு வழங்குவது போன்று இவர்களுக்கும் வழங்கும் நிலை உண்டாகியுள்ளது. அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங் களும் பிற செயல்முறைகளும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளன. அதற்கேற்ப அதன் தொடர்பான பல பாடங்களும் அங்கே புகுத்தப்பெற்றுத் திறம்பட நடத்தப்பெறுகின்றன. அதற்கென ஒரு தனி வாரியமே இப்போது அமைத்திருக்கிறார்கள் என எண்ணுகின்றேன். சித்தமருத்துவம் பற்றி எண்ணற்ற ஒலைச்சுவடிகளும் அங்கே உள்ளன. சிறந்த நூலகமும் உள்ளது. ஆய்வுக் கேற்ற அனைத்து வசதிகளும் உள்ளன என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/71&oldid=782614" இலிருந்து மீள்விக்கப்பட்டது