பக்கம்:நாடு நலம் பெற.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

为 நாடு நலம் பெற செய்ய வேண்டுவன இவ்வாறு ஓரளவு நம்நாட்டு மருத்துவமுறை வளர்ச்சி நிலை இருப்பினும், பொதும்க்களும் அரசாங்கமும் இன்னும் இதில் அதிகக் கருத்திருத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள். நான் செங்கற்பட்டு மாவட்ட மன்றத்தில் (Distrct Board) உறுப்பினராய் இரு ந் த. போது (1938-44)அம்மாவட்டத்தில் பத்து சித்த மருத்துவச் சாலைகளை முக்கிய பேரூர் சிற்றுார்களில் அமைக்க ஏற்பாடு செய்தேன். அப்போது தலைவராக இருந்த துரைசாமி ரெட்டியார் அவர்களும் அன்றைய அரசாங் கமும் ஒத்துழைத்தது. அக்காலத்தில் உயர்தரக் கல்வி, (11ஆம் வகுப்புவரை), மருத்துவம், சாலைகள் போன்ற அனைத்தும் மாவட்ட மன்றத்திடமே இருந்தன. செங்கற். பட்டு மாவட்ட மன்றத்தில் நாற்பத்தெட்டு உறுப்பினர் இருந்தோம். ஒவ்வொருவருக்கும் 45 அல்லது 50 ஊர்களே எல்லையாக இருக்கும். எனவே அவர்கள் அவ்வூர்களுக்குச் சென்று, மக்களை நேரில் கண்டு குறை தீர்த்து நலம்புரிய வாய்ப்பு இருந்தது. ஜனநாயகம் என வாய்கிழியப் பேசும் இந்நாளில் அவை எல்லாம் கிடையா. அரசாங்கமே எல்லாவற்ற்ையும் பார்த்துக்கொள்ளும் நிலையில்அதிலும் தனி அலுவலர் மேற்பார்வையில் நாட்டாட்சி கள், பஞ்சாயத்து முறைகள் நடைபெறுகின்றன. ஒருவர் எப்படி அத்தனை ஊர்களையும்-மக்களையும் கண்டு குறை அறிந்து தீர்க்க முடியும்? அதற்கு முன் வட்டக்குழுக் கள் (Taluk Board) இருந்தன. அது விரிந்த நிலையில் மாவட்ட மன்றங்கள் (District Board) அமைந்தன. பின் பஞ்சாயத்து சட்டப்படி பஞ்சாயத்துச் சபைகள் ஊர் தோறும் அமைந்தன. ஊரில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்கள் கைகளில் அவை சிக்கி ஏழைகள் அல்லல் படும்.நிலை உண்டாயிற்று. இன்று, பல ஆண்டுகளாக அந்நிலையும் இல்லாது, வெள்ளையன் ஆட்சி தொடங்கிய காலத்திருந்தமை போன்று அதிகாரிகளே எல்லாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/72&oldid=782616" இலிருந்து மீள்விக்கப்பட்டது