பக்கம்:நாடு நலம் பெற.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் - 71 பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாவம்! அவர்களால் அத்தனை பொறுப்புகளையும் ஏற்க முடியுமா? எனவே ஊர் தோறும் நல்லாட்சி அமைத்து, 'அங்கேயே, தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் சித்த மருத்துவ நிலையங்களை அமைத்து, நல்ல மருத்துவரை யும் மருந்து வகைகளையும் இருக்கச் செய்து அரசாங்கம் உடனடியாகச் செயல்பட வேண்டும். முடிவுரை-நன்றி பொதுமக்களும் இதன் சிறப்பை உணர்ந்து போற்ற வேண்டும். சிறு தலைவலி, தும்மல் என்றாலும் டாக்டரி டம் சென்று நூறோ, ஐம்பதோ கொடுக்கும் நாகரி கத்தில் வாழும் இன்றைய மக்களுக்கு இச் சித்தவைத் தியத்தின் பெருமை தெரியாதது அல்ல! என்றாலும் எங்கள் குடும்ப டாக்டர் இவர் என்று ஒருவரைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதும் எங்களுக்கு மாதம் ஆயிரம், இரண்டாயிரம் வைத்திய செலவு ஆகிறது என்று கூறிக் கொள்ளுவதும் தான் அவர்கள் நாகரிகமாக' உள்ளமையின் சித்த மருத்துவத்தை-எளிதாக நோய் நீக்கம் தருவத்ை- மதிக்க மறுக்கின்றனர். பேர்லியானா லும், விளம்பரத்தாலும் அதிக விலை உயர்வு காட்டுவ தாலும் அவற்றைத்தேடி ஒடும் நாகரிகம் இன்றைய நாகரிகமல்லவா! பள்ளிகளில்-கல்லூரிகளில் கூட இலஞ் சம் வாங்காதிருந்தால் ஆ! அது மட்டமானது போலும்! அதனால் தான் பணம் கேட்கவில்லை' என்று பேசுபவர் க்ள் சென்னையில் உள்ளனர். அப்படியே பெரும்பணம் கொடுத்துக் கல்வி நிலையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பவரும் பின் வருந்துபவரும் உளர். இந்த நிலை தான் சித்த மருத்துவத்துக்கும் நேர்ந்துள்ளது. போலி நாகரிகமும் புதுமைப்பெயர்களும் வெளிநாட்டுச் சாமான் களின் மோகமும் நம்மவரை ஆட்டிப்படைக்கும் இந்த அவலநிலை எல்லாத் துறைகளிலும் உள்ளன. எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/73&oldid=782619" இலிருந்து மீள்விக்கப்பட்டது