பக்கம்:நாடு நலம் பெற.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாடு நலம் பெற நாட்டில் ஒன்பதாம் நூற்றாண்டில் சூரிய வழிபாடு,என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று (Worship of Sun God in Tamil Nadu During Nineth Century) gang ஆய்வுச் செய்யத் தமிழ்த்துறையினர் மட்டுமன்றி, வான நூலா ராய்ச்சி, அணு ஆய்வு, நில நூல் ஆய்வு, ஆங்கிலத்துறை எனப் பல பிரிவினைச் சேர்ந்த பதினாறு கற்றுணர்ந்த பேராசிரியர்கள் அக்கட்டுரையினை நன்கு படித்து, பலப் பல வகையில் வினாக்கள் எழுப்பினர். நானும் அவருள் ஒருவனாக அங்கே இருந்தேன். அந்த மாணவி, விடுத்த கேள்விகளுக்கெல்லாம் தக்க பதில் கூறவே பட்டம் வழங்கலாம் எனப் பரிந்துரை செய்தோம். (இதுபற்றி என் நூல் 'ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்' என்பதில் விரிவாக எழுதியுள்ளேன், ஆனால் இங்கே 'டாக்டர் பட்டம் வாங்குவோருக்கே அத்தகைய தேர்வு நிலை இல்லையே. நான் மேலே காட்டியபடி மேற்பார்வை 'யாளராக, அவருக்கு வேண்டிய இருவர் துணையாளராக அமைவதால் பட்டம் வாங்குவது கடினமல்லவே. இவ்வாறு பட்டம்பெற்று வருபவர் பின் ஆசிரியர் களாகவோ வேறு துறையிலோ பணியாற்றுவார்களாயின் இவர்கள் பணி எப்படிச் சிறப்புற அமையும் பல்கலைக் கழகங்கள் இப்படிப்பட்ட உயர் பட்டம் பெறுபவர் களுக்கு முன் உரிமை தரவேண்டும் என்கின்றன. ஆனால் ஒரு சிலரன்றி பலர் இந்நிலையில் உள்ளமையின் அவர் களிடம் பயில்வார் என்னாவர் என்பது எண்ணத்தக்க தொன்றல்லவா? எடுத்துக்காட்டு ஒன்றினைக் கூறுவேன். எங்கள் கல்லூரிக்குத் தமிழாசிரியர் வேண்டி விளம்பரம் செய்தோம் பல விண்ணப்பங்கள் வந்தன. ஒரிரு டாக்டர் பட்டம் பெற்ற மங்கையரும் இருந்தனர். அவருள் ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தோம். அவருடைய ஆய்வுக்கு உரிய தலைப்பு 'ஒளவையார்அவரிடம் வாக்குண்டாம் என்ற ஒரு நூல் பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/98&oldid=782671" இலிருந்து மீள்விக்கப்பட்டது