பக்கம்:நாடு நலம் பெற.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாேட்டுக் கல்வி நலமுற 97 தெரியுமா? அதை எழுதியது யார்? அப்பாடல்கள் எதைக் காட்டுகின்றன? என்ற கேள்விகள் கேட்கப்பெற்றன. அவர் திகைத்தார். பின் வாக்குண்டாம் நல்ல மன முண்டாம்' என்பதையே திரும்பச் சொல்லிச் சொல்லி, மேலே ஒன்றும் தெரியாதாகி அப்படி ஒரு நூல் உண்டு என்றனர். அதன் ஆசிரியர் பெயரும் சொல்லத் தெரிய வில்லை. அப்படியே ஆங்கிலத்தில் டாக்டர்’ பட்டம் பெற்ற ஒருவரை, பள்ளி மேல் வகுப்புகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆரம்பித்து அதற்குரிய குறிப்புகளையும் தொகுக்கச் சொன்னார் முதல்வர். அத்தொகுப்பில் கீழே கண்ட வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன (நல்ல வேளை மாணவர் நலம் கருதி அவர்களை நீக் விட்டோம்). 1. I Will give the details of North America position and sise. 2. how it can used in various ways and types of natural resources all the details are give Very clearly. - 3. To enable to the know the students what is Transport. - 4. It will clearly deals with 5. The teacher says the first" of the chapters and - reads out. . 6. Makes the stucleuts to sead out to inprove their influency. Then the teacher gives the meaning for new words and explains line by line. இத்தகைய நிலையில் இன்றைய ஆய்வுப் பட்டங்கள் அம்ையுமாயின், இவர்கள் வழி பயிலும் மாணவர் நிலை என்னர்வது? பல்கலைக் கழகங்கள் இந்த முறையினை மாற்றி நாட்டுக் கல்வி நலத்தை நன்கு காக்க முன்வர வேண்டும். எனவே, இவ்வாறான மாறுபட்ட நிலைகளைக் கல்வித்துறையின்ர் உடன் மாற்ற வேண்டும். தக்க மேற் பார்வையில் இடம் மாற்றி நடத்தும் பள்ளி, கல்லூரித் தேர்வுகளும், ஆய்வுப் பட்டங்களுக்கு மேலை நாட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/99&oldid=782673" இலிருந்து மீள்விக்கப்பட்டது