பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பு மூட்டும் பாடல்கள் 95.

புருஷனுக்கு முன்னலே நின்ருல் அவன் மயங்கிப்போய் - அந்த இரவல் நகைகளுக்குப் பதிலாகப் புதிய நகை களையே வாங்கித் தருவள்னென்று எண்ணி ஒய்யாரமாக அவனுக்கு எதிரே தோன்றிள்ை.

கொடாக்கண்டர்களின் பரம்பரையிலே வந்த அவ னுக்குப் பெண்டாட்டியின் மோக வலை ஒரு பொருட் டாகத் தோற்றவில்லை. என்னவோ யோசித்துக்கொண் டிருக்கிருன். அவன் திரும்பிப்பார்த்தால் அவள் தன் காதை அலைத்துப் பூச்சிக்கூட்டின் மகிமையைக் காட்ட லாம்; கண்ணைச் சிமிட்டிக் கருத்தை உருக்கலாம்; காலை எடுத்து வைத்துத் தண்டையின் நாதத்தை எழுப்ப லாம்! அவன்தான் மரம்மாதிரி இருக்கிருனே!

வாய் திறந்து கேட்டாலொழிய அவன் கவனத்தை இழுக்க முடியாதென்று தெரிந்துகொண்டாள் மனைவி; கேட்டும் விட்டாள்:

இரவல் தண்டையாம் பூச்சிக் கூடாம்

ஏத்திருக்குதா புருஷா? அவன் அதற்குப் பதில் சொல்வதுதான் பலே ஜோர். " அப்படியா! மிகவும் நன்ருகப் பொருந்தியிருக்கிறது! கண்ணுலே பார்த்துச் சொல்வதல்ல; சத்திரத்திலே சகுனம் கேட்டேன். அதனல் தெரிந்தது' என்கிருன்.

சத்திரத்திலே சகுனம் கேட்டேன்

சரியா இருக்குது பெண்டாட்டி!

என்ன கிண்டல் பாருங்கள்!

  1. # * *,、 弹

பின் வரும் பாட்டில் வியாக்கியானம் இல்லாமலே சுவை தெரியும். - - - -