பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2宠 சாலேயிலே காதல்

மதுரைக்கு அருகிலே ஒரு சாலை. அந்தச் சாலையின்

இரு மருங்கிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் இருக்கின்றன. சாலேயிலே ஒரு கண்டு வண்டி போய்க்கொண் டிருக்கிறது. அதற்குள்ளே ஒரு நங்கை, இளமையும் அழகும் பொருந் தியவள், அமர்ந்திருக்கிரும்.

அந்த வண்டியைத் தொடர்ந்து இரும்பால் வடித்தாற் போன்ற ஆண் மகன் ஒருவன் செல்கிருன். வண்டியிலே போகிறவளுக்கும் அவனுக்கும் உறவு ஒன்றும் இல்லே " இருவரும் அயலார். ஒருவரை ஒருவர் பார்க்கும் நிலையில் அவர்கள் இருந்தார்கள்; அவ்வளவுதான்.

அது போதாதா? அவர்களுடைய கண்கள் தம் முள்ளே உறவாடிக் கொள்ளுகின்றன. அந்தப் பார்வை யின் மூலமாகவே இரண்டு உள்ளங்களிலும் ஏதோ ஒரு சக்தி பாய்ந்து கொந்தளிக்கச் செய்கின்றது.

養 藝 烹 菁

இந்த அழகான காட்சியை ஒரு தமிழ்ப் புலவன் காவியமாகச் செய்தால், அதை அறிவுடையவர்களும் வித்துவான்களும் படித்து இன் புற்றுப் பாராட்டுவார்கள். ஆஞல், இந்தக் காதல் நாடகத்தைப் பாடினவர் இன்ன ரென்று தெரியாது. யாரோ நாடோடிப் பேர்வழி பாடி யிருக்கிருன். அது சுண்ணும்பு குத்தும் பெண்கள் பாடு) வதற்கு ஏற்றதாக் அமைந்திருக்கிறது. அவர்கள் மிகவும் உத்ஸாகத்தோடு பாடும் பாட்டும் சுண்ணும்பு குத்தும்’ உலக்கையின் ஒலியாகிய தாளமும் அதன் பொருளும் ஒன்றைேடு ஒன்று பொருந்தி அழகு செய்கின்றன. -