பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 . கடோடி இலக்கியம்

அவள் என்ன பதில் சொல்லுவாள்? 'கேட்கிறது: உனக்கு என்ன வேண்டும்?' என்பாளா?

அவனுடைய துணிச்சல் கண்டு அவளுக்குக் கோபத் தான் வருகிறது. மங்கையரின் இயல்பு இதுதான். உள்ளம் ஆழத்திலே போராடிக்கொண் டிருந்தாலும் வெளியே விட்டுக்கொடுக்காமல் வீரம் பேசுவார்கள். அதைத்தான் வண்டிக்குள்ளே இ குக் கு ம் பெண் செய்கிருள்.

சாலையிலே ரெண்டுமரம் . ஏலேலமடி ஏலம் சாமிதுரை வச்சமரம்

ஏலேலமடி ஏலம் எல்லோருக்கும் ஏத்தமரம். ஏலேலமடி ஏலம் உனக்குத்தாண்டா துக்குமரம் ஏலேலமடி ஏலம். - - சாலைமரத்தைத் தூக்குமரமென்று சொல்லி, அவள் பய முறுத்துகிருள். 'ஜாக்கிரதை கண்டபடி பேசாதே" என்று எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாக, அப்படி எதையோ சொல்வது போலச் சொல்கிருள்.

அவன் பூரித்துப் போகிருன் ஏன் தெரியுமா? அது துரக்கு மரமாக இருக்கட்டும், கற்பக விருட்சமாக இருக்கட்டும்; அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. அவள் பேசினளே, அதுவே போதும் நெருப்பென்ருல் வாய் சுட்டுவிடுமா? அவள் தூக்கு மரம் என்று சொன்ன மாத்திரத்தில், அவன் மரண தண்டனை அடைந்த வகிை. விடுவாஞ? தூக்கு மரமென்று அவள் சொன்னபோது அவனுக்கு உயிரா போய்விட்டது இல்லை. இல்லை! போன உயிர் வந்த தென்றுதான் சொல்ல் வேண்டும்.