பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாலையிலே காதல் 429.

அவள் பேசத் துணிந்து விட்டான். இனி அவன் விடுவாளு? அவள் பேச்சோடே ஒட்டிக் கொண்டு தொடர்கிருன்: 'அப்படியா? அந்தத் தாக்குமரத் தண்டைதான் வாக்குமூலம் கேட்கிருர்கள்: சொல்" என்று சாமர்த்தியமாகச் சம்பாஷணையைத் தொடர்பு படுத்துகிருன்.

தூக்குமரத் தண்டையிலே ஏலேலமடி ஏலம் வாக்குமூலங் கேக்கிருங்க

ஏலேலமடி ஏலம்.

அவன் தான் கேட்கிருன். அவனுக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த நங்கை கன்னியா? கட்டிக்கொடுத்த பெண்ணு? இதை எப்படித் தெரிந்து கொள்கிறது? அவள் ஒருத்தனுக்கு உரியவளாக, முன்பே மணமானவளாக இருந்தால், அவள் பெண்மையில்ை அவனுக்குப் பயன் இல்லை; அவள் ஒர் ஆணுக்குச் சமானந்தான். கன்னியாக இருந்தால்தான் அவளைப் பெண்ணுகப் பார்ப்பதற்குப் பயன் உண்டு.

அவன் மீண்டும் பேச்சில் தொடர்பு அரும மரத்தைப் பற்றிக்கொண்டு கேட்கத் தொடங்குகிருன்:

ஒருமரத்தை வெட்டிப் போட்டு

ஏலேலமடி ஏலம் ஒருமரத்தை ஊஞ்சல் கட்டி ஏலேலமடி ஏலம் ஊஞ்சல்மேலே போகுங் கிளி. ஏலேலமடி ஏலம் - அது, ஆண்கிளியோ பெண்கிளியோ - ஏலேலமடி ஏலம். நா. 9.