பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நாடோடி இலக்கியம்

அவள் தான் தாயின் பாதுகாப்பில் இருக்கும் கன்னிப். பெண் என்பதைக் குறிப்பாகச் சொல்லுகிருள். முதலில் எழுந்த கோபம் இப்போது எங்கேயோ ஒடிப்போய். விட்டது. தன்னை மறந்து காதல் மீதுார மச்சான்' என்று அவனை அழைக்கிருள்.

ஆண்கிளியும் அல்ல மச்சான்

ஏலேலமடி ஏலம் பெண்கிளியும் அல்ல மச்சான்

ஏலேலமடி ஏலம் தாயை மறந்த கிளி

ஏலேலமடி ஏலம் தாய்வீட்டுக்குப் போகுங் கிளி

ஏலேலமடி ஏலம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளெல்லாம் அந்த இளங் காளை தெரிந்து கொண்டான். அவள் உள்ளத் தையும் "மச்சான்' என்று வாய் நிரம்ப அவள் சொன்ன வார்த்தையாலே உணர்ந்தான்.

வண்டி மிகவும் மெதுவாகப் போய்க்கொண் டிருக்கும் போது இந்த இரண்டு உள்ளங்களையும் உறவாட வைத்த காதலின் வேகத்தை என்னவென்று சொல்லுவது! எல்லாம் மறைபொருளான பேச்சு. அதனுள்ளே காதலுணர்ச்சி!

அவன், இனி அவளை நெருங்கலாம். உள்ளம் இரண்டும் ஒட்டி க்கொண்டன எ ன் ரு ல், பிறகு அவற்றைப் பிரிக்க யாரால் முடியும்? அவன் வண்டியை அணுகுகிருன் -