பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6) r காடோடி இலக்கியம்

ஆண்பிள்ளை தன் மனம் போனபடி இருக்கலாம். அவனும் அவளும் உல்லாசமாகப் பேசிக் கொட்டம் அடிக்கிருர்கள். அவனுக்குப் பசி உண்டோ இல்லையோ? அவள் கையாலே ஏதாவது வாங்கி உண்ணவேண்டுமென்று ஆசை;

கேட்கிருன்;

“வங்கார வடிமுத்துப் பொம்புளே-கொஞ்சம் வடிச்ச கஞ்சி கிடிச்ச கஞ்சி இல்லையோ?”

கஞ்சியா? தன் உயிரைப் போன்ற அருமைக் காதல லுக்குக் கஞ்சியா கொடுப்பது? என்ன அருமையான சமயம் வாய்த்திருக்கிறது? அவனுக்கு விருந்தல்லவா சமைத்துப்போட வேண்டும்? இதை முன்பே யோசித்து அவள் விருந்து செய்து வைத்திருக்க வேண்டாமா? அவள் அவன் வரப்போகிருன் என்ற மயக்கத்திலே எல்லாவற்றையும் மறந்திருந்தாள். அவன் கஞ்சி கேட்ட போதுதான் தான் தவறு செய்ததாக எண்ணிஞள். அவள் இரக்கத்தோடு சொல்கிருள்:

"அப்பவே சொன்னையோ ஆம்பளே-கொஞ்சம் சம்பா அரிசி போட்டுச் சமைப்பனே!” .

சம்பா அரிசிச் சோறு உயர்ந்ததல்லவா? அதைத் தான் அவனுக்குச் சமைத்துப் போடவேண்டும். இனி அவள் சும்மா இருப்பாளா?

ச ைமத்துக் கிமைத்துமே வச்சாளாம்- பயல் சம்மணம் போட்டுக்கிட்டு உண்பாளும்!

சம்பா அரிசியை அவன் எங்கே பார்த்திருக்கப் போகிருன்? சம்மணம் போட்டு ஆற அமர உண்ணத் தொடங்கினன். சோறு மட்டும் சம்பாச் சோருக

இருந்தால் போதுமா? அதற்கு வேண்டிய மற்ற இனம் வேண்டாமா? -