பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*எப்போ மழை பெய்யும்' 43.

மழை வேண்டி வரங்கிடந்த மன்னுயிருக்கு இறங்கி மழைபெய்கிறது. பூமி முழுதும் குளிர்கிறது. உயிர்த் தொகுதிகளெல்லாம் pவகளையோடு யூரிக்கின்றன. முன்பு இருந்த பஞ்சக் கோலமெங்கே? இப்போதுள்ள வளப்ப வாழ்வெங்கே? . . .

சோழனது சீமையிலே

சொலிக்கிறதே மின்னல்கள் கடலிரைச்சல் போலே

கமரிற்றே மேகங்கள் குமுறிற்று மேகமெல்லாம்

குடங்கொண்டு வார்த்தாற்போல் இரைகிறதே மேகங்கள்

ஏகவெள்ளம் பெருகிடவே சோனமழை போலே . .

சொரிகிறதே மேகமெல்லாம்.

இதுதான். ஜோர் ம்ழை' பெய்யும் காட்சி. பெய்த பிறகு பூமி குளிர்ந்து நீர்வளம் நிரம்புகிறது. .

நல்லமழை பெய்ததளுல் நாடு செழித்தனவே பூமி குளிர்ந்தனவே

பொய்கை நிரம்பினவே ஏரிகள் கிரம்பி

எதிர்க்கிறதே மேகவெள்ளம். மடுவுகள் கிரம்பி

வழிகிறதே வெள்ளமெங்கும் ஆறுகள் கிரம்புவதால்

அடைபடும் வெகுஜனங்கள்.