பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. நாடோடி இலக்கியம்

கழனிகள் கிரம்பிக்

கால்வாய்கள் தாம்கிரம்பி ஊற்றுக்கள் தாம் சுரந்து

ஓடிற்றே ஜலம் விசையாய். நீர்வளம் உண்டானல் நிலவளம் உண்டாகத் தாம. தம் உண்டோ? மரம் செடி கொடிகள் தழைக்கின்றன. - பூவாத மரங்களெல்லாம். பூத்துச் சொரிகின்றன. காயாத மரங்களெல்லாம் காய்த்துக் கணிகின்றன.

தடாகங்கள் தாம்கிரம்பித்

தாமரைகள் பூத்தனவே. வயல்கள் நிரம்பி - வாய்க்காலுந் தானேடி உலர்ந்த மரங்களெல்லாம் - உயிருண்டாய்த் தளிர்த்தனவே.

தாவர வர்க்கங்களோடு பறவையினங்கள் மலிந்தால் போதுமா? மனிதர்கள் வாழவேண்டாமா? அவர்கள் என்ன செய்கிரு.ர்கள்?

+

அடியற்ற மரங்களெல்லாம்

அன்பாய்த் தளிர்த்தனவே; இலையுந் தளிர்களெல்லாம்

ஏகமாய்த் தளிர்த்தனவே; காடு செடிகளெல்லாம்

கனக்கவே தான் தழைக்கும்; செடிகள் மரங்களெல்லாம் -

செழித்துத் தழைத்தனவே; பூவா மரங்களெல்லாம்

பூத்துச்சொரிந்தனவே;