பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போ மழை பெய்யும் ! 45

காயா மரங்களெல்லாம்

காய்த்துச் சொரிந்தனவே; கிள்ளப் பழுத்தனவே;

கிளிகள் வந்து சேர்ந்தனவே; அள்ளப் பழுத்தனவே;

அளிகள்வந்து சேர்ந்தனவே; செந்நெல் விளைந்தனவே;

தேசஞ் செழித்தனவே; பயிர்கள் விளைந்தனவே; .

பலனைக் கொடுத்தனவே; சோலைகள் சாலைகள்

சூழ்ந்த தடாகங்களில் குயில்கள் அடுத்தனவே;

குருவிகளும் வந்தனவே; மயில்கள் அடுத்தனவே;

வான்கோழி வந்தனவே. தாராவும் உள்ளானும்

தாவி அடுத்தனவே; அன்னங்கள் பேடைகள்

ஆங்தை அடுத்தனவே; கொக்குவக்கா கூச்சலிடக்

கோகிலங்கள் பாடுவன: பண்டுகள் தின்று . பறவைகள் பாடுவன:

கனிகளைத் தின்று .

களித்தன பறவையெல்லாம்.

蟹江 橡 . 笼