பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - காடோடி இலக்கியம்

ஏர்கட்டி உழுவாரும்

இளநாற்று நடுவாரும் பயிரிடுங் குடிகளெல்லாம்

பலப்பட்டுப்போர்ைகள்; ஒடுங் குடிகளெல்லாம் -

ஊரைவந்து சேர்ந்தார்கள்! பரதேசி பரதேசி

பஞ்சை பளுதியெல்லாம் சோழராஜன் பட்டணத்திற்

சுகப்பட்டு வாழ்ந்தார்கள்: பிச்சைக்கார ரெல்லாரும்

பெருமை அடைந்தார்கள்; சோழமண்ட லங்களெல்லாம்

சுகமாய்த் தழைத்தனவே.

அப்போது கவிவாணர்கள் அந்த மண்டலத்தைப் பாராட்டுவார்களாம்.

மாதமும் மாரி வருவிக்கும் மண்டலத்தில் சோழமண்டலமென்று சொல்லுவார் கவிவாணர்,

கம்முடைய ஏற்றக் கவிவாணர் மழை பெய்யும் அழகை எப்படிச் சொல்கிருர் பாருங்கள்:

எங்கள்பு மெல்லாம் திங்கள்மழை பெய்யும்; வெங்கிபுர மெல்லாம் விடியகிலாக் காயும்;

தோழிபுர மெல்லாம் சோதிகிலாக் காயும்; கன்னிபுர மெல்லாம் காலமழை பெய்யும்;