பக்கம்:நான்மணிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. நான்மணிகள்

நீர்க் கடலைக் கடப்பர் மாலுமிகள்; படைக் கடலைக் கடப்பர் மறவர்கள்; தவக் கடலைக் கடப்பர் நெறிநிற் போர்; அவைக் கடலைக் கடப்பர் கற்றறிந்தோர். (16):

மூப்பு மிகுந்தால் அழகு கெடும்; மீறிய செயல்களால் செல்வம் கெடும்; பிணி மிகுந்தால் உயிர் கெடும்; பொய். மிகுந்தால் நட்புக் கெடும் (17)

மனைக்கு ஆக்கம் மாண்புடைய மனைவி; படைக்கு. ஆக்கம் பயிற்சி பெற்ற வீரன்; நாட்டுக்கு ஆக்கம் நல்லதோர் மன்னன்; கேட்டுக்கு ஆக்கம் உறவினரை விரட்டல். (18).

கணவன் கலங்கினால் மனைவி கலங்குவாள்; கற்றவன் கலங்கினால் கருத்துகள் கலங்கும்; குடிமக்கள் கலங்கினால் கொற்றவன் கலங்குவான்; பண் கலங்கினால் பாடல் கலங்கிவிடும். (19).

மனை பாழாவது மனைவி இல்லாமல்; இடம் பாழாவது நண்பர்கள் இல்லாமல்; சபை பாழாவது பெரியோர் இல்லாமல், உடம்பு பாழாவது அறிவு' இல்லாமல். (20),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/14&oldid=1355053" இலிருந்து மீள்விக்கப்பட்டது