பக்கம்:நான்மணிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை 19

 புகைவித்தாப் பொங்கழல் தோன்றுஞ் சிறந்த 
 நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன் 
 முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின் 
 இன்னாவித் தாகி விடும்.                (31)
 பிணியன்னர் பின்னோக்காப் பெண்டிர் உலகிற் 
 கணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின் 
 புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர் 
 வல்லென்ற நெஞ்சத் தவர்.              (32)
 அந்தணரின் நல்ல பிறப்பில்லை யென்செயினும் 
 தாயிற் சிறந்த தமரில்லை - யாதும் வளமையோ 
 டொக்கும் வனப்பில்லை எண்ணின் இளமையோ 
 டொப்பது உ மில்.                       (33)
 இரும்பி னிரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின் 
 நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின் அரிய 
 வரியவற்றாற் கொள்ப பெரிய பெரியரா னெய்தப் 
 படும். - -                              (34)
 மறக்களி மன்னர் முற் றோன்றுஞ் சிறந்த - 
 அறக்களி யில்லாதார்க்குக் கீயுமுற் றோன்றும் 
 வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி .. 
 ஊரிற் பிளிற்றி விடும்.                   (35)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/21&oldid=1314390" இலிருந்து மீள்விக்கப்பட்டது