பக்கம்:நான்மணிகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 29

கற்றன்னார் கற்றாரைக் காதலர் கண்ணோடார் செற்றன்னார் செற்றாரைச்சேர்ந்தவர்-தெற்றென்ன உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவி னார். (56)

மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும் பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர் துறப்பார் துறக்கத் தவர். (57)

என்று முளவாகு நாளும் இருசுடரும் என்றும் பிணியுங் தொழிலொக்கும் - என்றும் கொடுப்பாருஞ் கொள்வாரு மன்னர் பிறப்பாருஞ் சாவாரும் என்று முளர். (58)

இனிதுண்பான் என்பான் உயிர்கொல்லா துண்பான் முனிதக்கான் என்பான் முகனொழிந்து வாழ்வான் தனியன் எனப்படுவான் செய்தநன் றில்லான் இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும் முனியா வொழுக்கத் தவன். . - (59)

ஈத்துண்பான் என்பான் இசைநடுவான் மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் - தெற்ற நகையாகு நண்ணார்முற் சேறல் பகையாகும் பாடறியா தானை இரவு. (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/31&oldid=587257" இருந்து மீள்விக்கப்பட்டது