பக்கம்:நான் இருவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் சூழ்ந்த வட்டாரத்தில் அந்த இடம் மட்டும் காட்டுத் தீ போலப் பொலிவோடு விளங்கியது. புதிதாக வர்ணம் தீட்டப் பெற்ற கதவுகளும், மெருகூட்டி மின்னும் பித்தளைப் பிடிகளும், பரிசுத்த மான சூழ்நிலையும் வழிப்போக்கர்களின் கண்ணைக் கவர்ந்து களிப்பூட்டின், ஒரு மூலையிலிருந்து இரண்டு வீடு தள்ளிப்போனால், கீழ்புறம் இடது பக்கத்தில், ஒரு வீட்டின் முன் பாகம் தெருவில் துருத்திக் கொண்டு நின்றது. தெருவில் தலை நீட்டிக் கொண்டிருந்த அந்தக் கட்டிடம் பார்க்க - வீகாரமாயிருந்தது. இரண்டடுக்கு மாடி. எனினும் ஜன்னலே இல்லை. கீழ்த்தட்டிலே மட்டும் ஒரு வாசற் கதவு ; மேலே காரை விழுந்து ஜன்னலே யற்ற வெறுஞ் சுவர். வெகுகாலமாக அது , கவனிப்பற் றுக் கிடக்கிறது என்பதை அதன் ஒவ்வொரு பாகங்களும் எடுத்துக் காட்டின்.. தட்டுவதற்கு வசதியோ, 1மணியோ அற்ற அந்தக் கதவு திற் மிழந்து பொரிந்து பொடித்து போயிருந்தது, சோமாரிகள் அதன் கீழ் தங்கினார்கள். அதில் நெருப்புக் குச்சி கிழித்தார்கள், சிறு குழந்தைகள் அங்கே கடை பரப்பினார்கள், அதன் வளைவு களில் பள்ளிப் பையன்கள் தங்கள் கத்தியின் கூர்:ை யைப் பரிசோதித்திருந்தார்கள். ஒரு தலைமுறைக்கு மேலாகியும், அந்தக் கட்டிடத்தைப் பழுது பார்க்கவோ, அங்கு நடக்கும் அக்கிரமங்களைப் போக்கடிக்கவோ யாருமில்லை எனத் தோன் றிற்று . என்பீல்டும் அட்டர் 2 னும் தெருவின் மறுபக்கத்திலிருந் தார்கள், அந்த வாசலுக்கு நேராக வரும்போது, என்பீல்ட் தமது கைத்தடியைத் தூக்கி, அந்த வீட்டைச் சுட்டிக்காட்டி.னார்.

  • எப்போதாவது அந்தக் கதவைக் கவனித்திருக்கிறாயா ?"

என்று கேட்டார். அவருடைய நண்பர் ' ஆமாம் " என்றதும், "* என் மனத்தில் அதைப் பற்றிய அதிசயக் கதை ஒன்று இருக் கிறது ” என்றார், “ அப்படியா ?" என்று அட்டர்ஸன் குரலில் வேற்றுமை தொனிக்கக் கேட்டார்; “ என்ன கதை ?" என்பீல்ட் சொல்ல ஆரம்பித்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/11&oldid=1268734" இலிருந்து மீள்விக்கப்பட்டது