பக்கம்:நான் இருவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன். இருவர் " இருக்கலாம், அவர் விலாசத்தை மட்டும் பார்த்திருக்கி றேன், வேறு எங்கேயோ வசிக்கிறார். என்று பதிலளித்தார் என்பீல்ட். . " இந்த வீட்டைப் பற்றி வேறொன்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வில்லையோ ?” " இல்லை, எனக்கே வெட்கமாயிருந்தது " என்று பதில் வந் தீது. கேள்வி கேட்பதையே நான் மிகவும் உணர்ந்து கேட்ப வன். கேள்வியும் பதிலும் சமயங்களில் விரும்பத்தகாத .பயன் களைத் தந்து விடுகின்றன. 'நீ ஒரு கேள்வி கேட்பதென்பது, மலையுச்சியிலிருந்து கொண்டு, ஒரு கல்லை உருட்டித் தள்ளுவது போலத்தான், அந்தக் கல் தனது வழியிலுள்ள கற்களையெல் லாம் இழுத்து உருட்டிக் கொண்டு ஓடி வருகிறது.. திடீரென அந்தக் கல் ஒரு அப்பாவியின் தலைமேல் விழுகிறது. அலன் சாகிறான், அவன் குடும்பம் பெயர் இழக்கிறது. அதனால் தான் நான் கேள்வி கேட்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண் டிருக்கிறேன். விஷயம் ஓரளவு ஏறுக்கு மாறாயினும், அதைப் பற்றிக் கேள்விகள் கேட்பதே இல்லை.” " நல்ல கொள்கைதான் என்றார் வக்கீல், "ஆனால் அந்த இடத்தைப்பற்றி நானாக் 'ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன். அது வீடு மாதிரியே இல்லை. இந்தக் கதி வைத் தவிர்த்து வேறு கதவும் இல்லை, அதன் வழியாக யாரும் போக வரக் காணோம். என்றைக்காவது அந்தப் பேர் வழி மட்" டும் வருவான். முதல் மாடியில் முன்புறமாக மூன்று ஜன்னல் கள் : இருக்கின்றன. கீழ்த்தட்டில் அதுவும் தான் கிடையாது. 'ஜூன் னல்களெல்லாம். எப்போதும் மூடிக் கிடந்தாலும், சுத்தம் செய் யப்பட்டிருக்கும், ஒரு புகைக் கூண்டும் உண்டு; அதன் வழியாய்ப் புகையும் போய்க் கொண்டிருக்கும். ஆதலால், யாராவது இதில் குடியிருக்கத் தான் செய்கிறார்கள். எனினும் நிச்சயமாய்த் தெரிய வில்லை. ஏனெனில் இந்த வட்டாரத்தில் கட்டிடங்களெல்லாம் நெருக்கமாக இருப்பதால், ஒரு கட்டிடத்தின் ஆரம்பம் எங்கே, அதன் முடிவு -எங்கே என்பதையெல்லாம் கண்டு பிடிப்பது சிரம ம.ாயிருக்கிறது. "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/15&oldid=1268738" இலிருந்து மீள்விக்கப்பட்டது