பக்கம்:நான் இருவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் குறிப்பிட்ட ஸ்தலத்துக்கு வண்டி வந்து நின்றது; பனி மூட்டமும் ஓரளவு விலகியிருந்தது. ஒரு சாராயக் கடை,. ஒரு கடைத்தரமான பிரெஞ்சு ஹோட்டல், மலிவான சரக்குகளை விற்கும் ஒரு குட்டிக் கடை, வாசற்படிகளில் கூனிக் குறுகிக் கிடக்கும் அநாதைக் குழந்தைகள், கையிலே சாவியைச் சுழற் றிக் கொண்டு, காலையில் தொண்டையை நனைக்கச் செல்லும் பல தேசத்துப் பெண்கள்-இத்தகைய பல காட்சிகள் அந்தத் தெருவிலே நிறைந்து காணப்பட்டன. மறுகணம் பனி மூட்டம் மீண்டும் கவிந்து அந்தக் காட்சியைக் கலைத்துவிட்டது. இது தான்' ஹென்றி ஜெயிலின் பிரியமான பிள்ளையின் குடியிருப்பு- ஜெகவின் இரண்டரை லக்ஷம் பவுன்களுக்கு வாரிசு, அவன் ! தந்தம்போல் முகம் வெளுத்தும், வெள்ளி போல் தலை நரைத்துப்போன ஒரு கிழவி கதவைத் திறந்தான். அவள் முகத் தில் தெரியும் தீய. பாவம், அவளுடைய சாகச மாய்மால் குணத் 'தால் ஓரளவு மங்கியிருந்தது. எனினும் அவள் நடத்தை மிக வும் நன்றாயிருந்தது. " ஆமாம். இதுதான் ஹைடின் வீடு: ஆனால் அவர் வீட்டிலில்லையே. இரவு வெகு நேரம் கழித்துத் தான் வந்தார். வந்த ஒரு மணி நேரத்தில், மறுபடியும் போய் விட்டார். ஆனால், இது மாதிரி வரத்துப் போக்கு ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. அவருடைய நடவடிக்கைகளே ஒரு ஒழுங் கற்றலை. சமயங்களில் அவர் வருவதே இல்லை. உதாரணமாக, இரண்டு மாத காலமாக இந்தப் பக்கமே வராதவர், நேற்றிரவு தான் வந்து சென்றார், என்றாள். “ ரொம்ப சரி, நாங்கள் அவர் அறைக ளைப் பார்வையிட வேண்டும் " என்றார் வக்கீல். அந்தக் கிழவி அதற்கு ஒத்துக் கொள்ளாததைக் கண்டு, " இவர் யார் என்று தெரியுமா ? இவர் ஸ்காட்லண்டு யார்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், நியூ காமென் ! என்றார். ., வேண்டா வெறுப்பாய் அவள் முகத்தில் மகிழ்ச்சி தோன் "றிற்று. " அப்படியா? அவர் எதிலேனும் மாட்டிக் கொண் டாரா ? அப்படி என்ன செய்து விட்டார்?” என்றாள். அட்டர்ஸனும் இன்ஸ்பெக்டரும் ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டனர். “ இங்குகூட அவனுக்குச் செல்வாக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/35&oldid=1268759" இலிருந்து மீள்விக்கப்பட்டது